• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அந்நிய நேரடி முதலீடு: முதலிடத்தில் தமிழ்நாடு.. அதுவும் எந்த மாசத்துல நடந்திருக்கு தெரியுமா? | Tamil Nadu Tops India’s FDI Chart in Q1 FY27 with $5.9 Billion—30% Share, Doubled Inflows Amid New Govt

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அந்நிய நேரடி முதலீடு: முதலிடத்தில் தமிழ்நாடு.. அதுவும் எந்த மாசத்துல நடந்திருக்கு தெரியுமா? | Tamil Nadu Tops India’s FDI Chart in Q1 FY27 with $5.9 Billion—30% Share, Doubled Inflows Amid New Govt
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அந்நிய நேரடி முதலீடு: முதலிடத்தில் தமிழ்நாடு.. அதுவும் எந்த மாசத்துல நடந்திருக்கு தெரியுமா?

இந்தியாவில் தொழில்துறையிலும் உற்பத்தியிலும் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ், ஐடி என பல துறைகளிலும் தமிழ்நாடு நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டுக்கு புதிதாக ஒரு பெருமை கிடைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY27) அதாவது ஏப்ரல்,-மே- ஜீன் ஆகிய மூன்று மாதங்கள் அடங்கிய காலாண்டில் மட்டும் தமிழ்நாடு சுமார் 5.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகளின் அளவு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முன்னணி முதலீட்டுத் தலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு: முதலிடத்தில் தமிழ்நாடு.. அதுவும் எந்த மாசத்துல நடந்திருக்கு தெரியுமா?

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 25,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இந்த 57,011 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்தமாக இந்த காலாண்டில் இந்தியாவிற்கு வந்த அந்நிய நேரடி முதலீடுகளில் தமிழ்நாடு 30% பங்களிப்பை கொண்டுள்ளது.

ஜப்பானின் முன்னணி நிறுவனமான MUFG தமிழகத்தின் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்ததே இதுவே தமிழ்நாடு இந்த பட்டியலில் முன்னிலை வகிக்க முக்கிய காரணம். அதே வேளையில் போட்டி மாநிலங்களான கர்நாடாகா, மகாராஷ்ரா மாநிலங்களில் முதலீடுகள் ஈர்ப்பு என்பது சுமார் 10% வரை சரிந்துள்ளது.

உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் சேவை துறை சார்ந்த முதலீடுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்த வள்ர்ச்சிக்கு காரணம். விண்வெளி , மின்னணுவியல், பாதுகாப்புத் துறை , கடல்சார் துறை மற்றும் ஜிசிசி போன்ற அதிநவீன உயர் தொழில்நுட்பத் துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை வலுவான திசையில் கொண்டு செல்கின்றன.

முதலீடுகள் என்பது சென்னை நகரை மட்டுமே மையமாக கொண்டிருக்கவில்லை. மாறாக, சிப்காட் தொழிற்பேட்டைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் தொழில் கட்டமைப்பு வசதிகள் இப்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்பதால் தமிழ்நாட்டில் முதலீடுகளும் பரவலாகியுள்ளன.

தொழில் வளர்ச்சியின் மூலம் வேலைவாய்ப்புகள் திறமையான இளைஞர்களை தேடி அந்தந்த உள்ளூர் பகுதிகளுக்கே சென்று சேருகின்றன. இதனால் அனைத்து மாவட்டங்களும் சீராக வளர்ச்சி அடைய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

அந்நிய முதலீடுகள் வந்த ஏப்ரல் , மே , ஜூன் மாதங்களில் ஏப்ரலில் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரைகள் நடந்ததால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. மே மாதம் 10ஆம் தேதி விஜய் அரசு பதவியேற்று ஆட்சி அமைத்தது.

Share This Article

English summary

Tamil Nadu Tops India’s FDI Chart in Q1 FY27 with $5.9 Billion—30% Share, Doubled Inflows Amid New Govt

அந்நிய நேரடி முதலீடு: முதலிடத்தில் தமிழ்நாடு.. அதுவும் எந்த மாசத்துல நடந்திருக்கு தெரியுமா? / Tamil Nadu has emerged as India’s top FDI destination in Q1 FY27 (April–June 2026), attracting $5.9 billion in foreign direct investment equity inflows—more than double the $2.7 billion recorded in the same period last year.

Story first published: Saturday, September 26, 2026, 15:09 [IST]

Other articles published on Sep 26, 2026

Read More

Previous Post

நெல் உற்பத்தியாகும் டெல்டாவில் எகிறிய அரிசி விலை! விஜய் அரசு கண்டுக்கல.. கொந்தளிக்கும் மக்கள்! | Rice prices surge in paddy-producing Tiruvarur; public outraged over Vijay government’s alleged inaction

Next Post

அந்தோணி லோக்கின் ராஜினாமா கடிதத்திற்காக காத்திருக்கிறேன்

Next Post

அந்தோணி லோக்கின் ராஜினாமா கடிதத்திற்காக காத்திருக்கிறேன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin