• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

‘தேசிய அடையாளம் கனடா; கலாசார வேர்கள் ஈழத் தமிழ்’ – நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சு வைரல்! – புலம்பெயர் சமூகத்தில் விவாதம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
‘தேசிய அடையாளம் கனடா; கலாசார வேர்கள் ஈழத் தமிழ்’ – நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சு வைரல்! – புலம்பெயர் சமூகத்தில் விவாதம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
சினிமா
/
‘தேசிய அடையாளம் கனடா; கலாசார வேர்கள் ஈழத் தமிழ்’ – நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் பேச்சு வைரல்! – புலம்பெயர் சமூகத்தில் விவாதம்

தனது தேசிய அடையாளம் கனடா என்றும் கலாசார வேர்கள் ஈழத் தமிழ் என்றும் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் வெளியிட்ட கருத்துக்கள் புலம்பெயர் சமூகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.


பிரபல Netflix தொடர்கள் ஊடாகப் சர்வதேசப் புகழ்பெற்ற கனேடிய தமிழ் நடிகையான மைத்ரேயி ராமகிருஷ்ணன், தனது தேசிய மற்றும் கலாசார அடையாளம் குறித்துப் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துகள் சர்வதேச ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. 

கனேடிய குடியுரிமை மற்றும் தனது தமிழ் கலாசாரப் பாரம்பரியம் குறித்து அவர் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகப் பேசி வந்துள்ள நிலையில், அவரது புதிய திரைப்படமான ‘பெஸ்ட் ஒப் த பெஸ்ட்’ (Best of the Best) நெற்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மீண்டும் புலம்பெயர் சமூகத்தில் தீவிர கவனத்தைப் பெற்றுள்ளது.

பிரபல நகைச்சுவை கலைஞர் ஹசன் மின்ஹாஜ் உடனான நேர்காணல்கள் மற்றும் நியூ ஜேர்சியிலுள்ள இலங்கைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகளுடனான உரையாடல்களின் போது, தான் கனடாவில் பிறந்து வளர்ந்த கனேடிய பிரஜை என்பதைத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது கலாசார மற்றும் பூர்வீக வேர்கள் ஈழத் தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். 

தேசிய ரீதியாகத் தான் ஒரு கனேடியர் என்றும், அதேவேளை தமிழ்ச் சமூகத்துடனான தனது கலாசாரத் தொடர்பு ஆழமானது என்றும் அவர் முன்னெடுத்த வெளிப்பாடுகள் உலகளாவிய தமிழ் புலம்பெயர் சமூகம் மற்றும் இணைய பயனர்கள் மத்தியில் வெவ்வேறு விதமான கருத்துப் பிரதிபலிப்புகளைத் தோற்றுவித்துள்ளன.

இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாகப் புலம்பெயர்ந்த குடும்பங்களைக் கொண்ட வெளிநாட்டுத் தமிழ் சமூகத்தின் மத்தியில், தேசிய அடையாளம் மற்றும் அதற்கான சொற்பிரயோகங்கள் தொடர்பான விவாதங்கள் தலைமுறை மாற்றங்கள், வரலாற்று அனுபவங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. 

பூர்வீக தேசத்துடனான புவியியல் ரீதியான அல்லது தேசிய ரீதியான தொடர்புகளை அவர் மேலும் வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வாதிடும் அதேவேளை, கனடாவில் பிறந்த இரண்டாம் தலைமுறைப் பிரஜையாகத் தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தனது அடையாளத்தை வரையறுத்துக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு என ஆதரவாளர்களும் கலாசாரச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கைக்கு வெளியே பிறந்து வளர்ந்த போதிலும், மைத்ரேயி ராமகிருஷ்ணன் சர்வதேச அரங்கில் தனது தமிழ் கலாசார அடையாளங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளார். 

2020 ஆம் ஆண்டில் தனது 18 ஆவது வயதில் முதல்முறையாக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட அவர், அதன் பின்னரும் தனிப்பட்ட விஜயங்களை முன்னெடுத்துள்ளார். 

பிறந்து வளர்ந்த நாட்டின் குடியுரிமைக்கும் பூர்வீக கலாசார மரபுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் கையாளும் புலம்பெயர் இரண்டாம் தலைமுறைக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கலான அடையாள சவால்களையே இவரது கருத்துகள் மீதான உரையாடல்கள் வெளிப்படுத்துவதாக அவதானிகள் கருதுகின்றனர்.

Read More

Previous Post

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் செய்யும் தவறுகள்.. புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் அறிய வேண்டியவை! | Mistakes made by home loan borrowers: What first-time borrowers need to know!

Next Post

“பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்” – ஈரான் புதிய நிபந்தனை! | World News (உலக செய்திகள்)

Next Post
“பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்” – ஈரான் புதிய நிபந்தனை! | World News (உலக செய்திகள்)

"பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார்" - ஈரான் புதிய நிபந்தனை! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin