• Login
Saturday, September 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

14 நிமிடங்களில் 30 பரிவர்த்தனைகள் ஊடாக கணக்கிலிருந்து ரூ.28 இலட்சம் மாயம்: கட்டமைப்பில் குறைபாடு இல்லை என வங்கி விளக்கம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
14 நிமிடங்களில் 30 பரிவர்த்தனைகள் ஊடாக கணக்கிலிருந்து ரூ.28 இலட்சம் மாயம்: கட்டமைப்பில் குறைபாடு இல்லை என வங்கி விளக்கம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
14 நிமிடங்களில் 30 பரிவர்த்தனைகள் ஊடாக கணக்கிலிருந்து ரூ.28 இலட்சம் மாயம்: கட்டமைப்பில் குறைபாடு இல்லை என வங்கி விளக்கம்

இலங்கை வங்கியின் பத்தேகம கிளையில் ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவரின் கணக்கிலிருந்து 14 நிமிடங்களில் 28 இலட்சத்துக்கும் அதிக பணம் பரிமாற்றப்பட்டுள்ள நிலையில், வங்கி கட்டமைப்புக்களில் குறைபாடில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஓய்வுபெற்ற இராணுவ செவிலியர் அதிகாரி ஒருவரின் இலங்கை வங்கிக் கணக்கிலிருந்து வெறும் 14 நிமிடங்களுக்குள் 30 பரிவர்த்தனைகள் ஊடாக 28 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் சட்டவிரோதமாகப் பரிமாற்றப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

எனினும், குறித்த பணப்பரிவர்த்தனைகள் உரிய அங்கீகாரத்துடனேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது வங்கியின் கட்டமைப்புக்களிலோ அல்லது டிஜிட்டல் வங்கிச் செயலிகளிலோ எவ்விதப் பாதுகாப்புக் குறைபாடுகளோ அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளோ ஏற்படவில்லை எனவும் இலங்கை வங்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கியின் பத்தேகம கிளையில் குறித்த ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் தனது வங்கிக் கணக்கைப் பராமரித்து வந்துள்ளார். சொந்தமாக வீடு அமைப்பதற்காகத் தனது ஓய்வூதியத்தை அடமானம் வைத்து இலங்கை வங்கியிலேயே பெறப்பட்ட 44 இலட்சம் ரூபாய் கடன்தொகையின் ஒரு பகுதியே இவ்வாறு கணக்கிலிருந்து மாயமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். 

கடந்த ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி அதிகாலை 1.24 மணி முதல் 1.38 மணி வரையான 14 நிமிட இடைவெளியில், தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 28 முறைகளும், அதனைத் தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 19 ஆயிரம் ரூபாய் வீதம் மேலும் இரண்டு முறைகளும் என மொத்தம் 2,869,000 ரூபாய் பணம் பல்வேறு கணக்குகளுக்குப் பரிமாற்றப்பட்டுள்ளது.

தமது கையடக்கத் தொலைபேசிக்கு அடுத்தடுத்து வந்த குறுஞ்செய்திகளை (SMS) அவதானித்த உடனேயே அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக இலங்கை வங்கியின் அவசர தொலைபேசி இலக்கத்தை (Hotline) அழைத்து வங்கிக் கணக்கையும் அட்டையையும் முடக்குமாறு கோரியுள்ளனர். எனினும், அந்தக் கோரிக்கைக்குப் பின்னரும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று நிதி முழுமையாக இழக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். 

மறுநாள் காலையில் பத்தேகம வங்கிக் கிளைக்குச் சென்று முறையிட்ட போதிலும், தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என்றே அதிகாரிகள் பதிலளித்ததாகப் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உத்தியோகத்தரின் மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் முறையிட முற்பட்ட போது, சம்பந்தப்பட்ட நிதித் தொகை அதிகம் என்பதால் அவர்கள் வேறு பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதனையடுத்து எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலங்கை கணினி அவசர கால தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) ஆகியவற்றிலும் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும் பணம் எங்கு சென்றது அல்லது இப்பரிவர்த்தனைகளை முன்னெடுத்தது யார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் பகிரங்க விளக்கம் அளித்துள்ள இலங்கை வங்கி, வங்கியின் அமைப்புகளிலோ அல்லது டிஜிட்டல் செயலிகளிலோ இடம்பெற்ற ஊடுருவல் காரணமாகவோ, அங்கீகாரமற்ற அணுகல் மூலமாகவோ அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளினாலோ இப்பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. 

இணைய வங்கிச் சேவைக்கான உள்நுழைவு விவரங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அனுப்பப்பட்ட ஒருமுறை கடவுச்சொல் (OTP) ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தியே இந்தப் பரிவர்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வங்கி குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள், OTP இலக்கங்கள், தனிநபர் அடையாள எண்கள் (PIN), அட்டை விவரங்கள் போன்ற இரகசியத் தகவல்களை எவருக்கும் பகிர வேண்டாம் எனவும், சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை அழுத்த வேண்டாம் எனவும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Source: themorningtelegraph

Read More

Previous Post

நெகிரி செம்பிலான் மன்னரின் பதவியில் தலையிடப் போவதில்லை என்பதில் அன்வார் உறுதி – Malaysiakini

Next Post

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் செய்யும் தவறுகள்.. புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் அறிய வேண்டியவை! | Mistakes made by home loan borrowers: What first-time borrowers need to know!

Next Post
வீட்டுக்கடன் வாங்கியவர்கள் செய்யும் தவறுகள்.. புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் அறிய வேண்டியவை! | Mistakes made by home loan borrowers: What first-time borrowers need to know!

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் செய்யும் தவறுகள்.. புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் அறிய வேண்டியவை! | Mistakes made by home loan borrowers: What first-time borrowers need to know!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin