Last Updated:
ராகுல் காந்திக்கு இந்திய அரசியல் குறித்த அறிவு இல்லை என பாஜகவின் சுதன்ஷு திரிவேதி விமர்சித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் தனது தேர்தல் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று பாஜக பதிலளித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, நாட்டில் தேர்தல் முறை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், ஆளும் கட்சிகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அலை பா.ஜ.க-வுக்கு மட்டும் வேலை செய்யாதது ஏன்? என்றும் பேசியிருந்தார். வடகொரியா, ஈராக்கில் தான் இத்தகைய சூழல் நிலவும் என்றும் சாடியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டிலும், 1977-க்குப் பிறகு மேற்கு வங்கத்திலும் காங்கிரஸால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை என்று தெரிவித்து பதில் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, “ராகுல் காந்திக்கு இந்திய அரசியல் குறித்த எந்த அறிவும் இல்லை. 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை; அக்காலத்தில் பாஜகவே இல்லை. வங்காளத்தில் 1977-க்குப் பிறகும், பீகாரில் 1990-க்குப் பிறகும் காங்கிரஸ் ஆட்சி அமையவில்லை. உத்தரப் பிரதேசத்தில் 1989-க்குப் பிறகும், ஒடிசாவில் 1999-க்குப் பிறகும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை.
#WATCH | Delhi: BJP National Spokesperson and MP Sudhanshu Trivedi says, “Just a short while ago, Rahul Gandhi once again presented a PPT before you, which usually comes from some unknown, conspicuous, and dubious sources that nobody knows. He has no knowledge of Indian politics.… pic.twitter.com/Dq1z68KDLM
— ANI (@ANI) September 24, 2026
ராகுல் காந்திக்கு இதைப் பற்றியெல்லாம் எந்தத் தகவலும் தெரியவில்லை. வெளிப்படையான தேர்தல்கள், சிசிடிவி (CCTV) கேமராக்களின் பயன்பாடு மற்றும் சுதந்திரமான ஊடகங்களின் வருகை ஆகியவை நடைமுறைக்கு வந்ததிலிருந்து, அவர்கள் ஆட்சிக்கு வருவதில் சிரமத்தை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
அதாவது; தேர்தல் முறை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதால் காங்கிரஸால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை என அவர் விளக்கி கூறினார். மேலும், இரு தேர்தல் ஆணையர்களுக்குத் தெரியாமல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முடிவுகளை ரகசியமாக எடுத்தார் என்ற செய்திக்கும் சுதன்ஷு திரிவேதி மறுப்பு தெரிவித்தார்.


