• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
மலையகம்
/
காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை வழங்குவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் சுந்தரராஜ் பிரபாகரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பலரிடம் பல இலட்சம் ரூபாய் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில், ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் சுந்தரராஜ் பிரபாகரன், ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (25) ஆஜர்படுத்தப்பட்டபோது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தாம் பெற்றுக்கொண்ட 6 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் மீளச் செலுத்துவதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்து சந்தேகநபரை 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், குறித்த வழக்கை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபர் 2022ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கள உத்தியோகத்தர் ஒருவருடன் இணைந்து, ஹட்டன் ரூவன்புர பகுதியில் உள்ள ஆணைக்குழுவின் காணிகளை வழங்குவதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றியுள்ளார். இதன்போது தனது வங்கிக் கணக்கிற்கு 6 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை பலரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, இதுவரை காணியை வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினரால் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, ஹட்டன் கோட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வாவினால் சந்தேகநபரின் வங்கிக் கணக்கு அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் அவர் நேற்று (24) கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பொலிஸ் பொறுப்பதிகாரி, சந்தேகநபர் இதுபோன்ற மேலும் பல பண மோசடிகளுடன் தொடர்புடையவர் எனச் சுட்டிக்காட்டியதுடன், இது குறித்து கிடைக்கும் புதிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அத்துடன், இந்த பண மோசடிக்கு உடந்தையாக செயற்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கள உத்தியோகத்தரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வழக்கு விசாரணைகளின் போது, முறைப்பாட்டாளரின் பணத்தை உரிய முறையில் செலுத்தத் தவறினால் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என எச்சரித்த நீதவான், சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அப்பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் செலுத்த ஒப்புக்கொண்டதையடுத்தே அவருக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.

Read More

Previous Post

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. எத்தனை மணிக்கு போட்டி தொடங்கும்? எந்த சேனல், ஓடிடியில் ஒளிபரப்பு? | IND vs WI: When and Where will be the Live Streaming of India vs West Indies 1st ODI Match

Next Post

ஹார்முஸ் திறப்புக்கு ஈரான் வைத்த நிபந்தனைகள்: எண்ணெய் விலை குறையுமா?|Hormuz to Reopen in 7 Days? Iran Sets Conditions for US

Next Post
ஹார்முஸ் திறப்புக்கு ஈரான் வைத்த நிபந்தனைகள்: எண்ணெய் விலை குறையுமா?|Hormuz to Reopen in 7 Days? Iran Sets Conditions for US

ஹார்முஸ் திறப்புக்கு ஈரான் வைத்த நிபந்தனைகள்: எண்ணெய் விலை குறையுமா?|Hormuz to Reopen in 7 Days? Iran Sets Conditions for US

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin