தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின்
ஏற்பாட்டில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (25) காலை முதல் மாலை வரை குறித்த அடையாள
உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் பசி இருந்து தாயக மண்ணுக்காக
தன்னுயிரை தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 39ஆவது வருட நினைவு
தினத்தையொட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இந்த அடையாள உணவு
தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

