• Login
Friday, September 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Palani Land: பழனி ரூ 100 கோடி நில மோசடி! ஜெயபிரகாஷை கஸ்டடியில் வைத்து விசாரணை!திடுக் வாக்குமூலம்! | Palani temple land scam mediator Jayaprakash produced in court

GenevaTimes by GenevaTimes
September 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Palani Land: பழனி ரூ 100 கோடி நில மோசடி! ஜெயபிரகாஷை கஸ்டடியில் வைத்து விசாரணை!திடுக் வாக்குமூலம்! | Palani temple land scam mediator Jayaprakash produced in court
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Published: Friday, September 25, 2026, 7:52 [IST]

பழனி: பழனி கோயிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் இடைத்தரகரும், பத்திரப்பதிவு எழுத்தருமான ஜெயபிரகாஷ் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வீட்டிலிருந்து கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க், முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பழனி அடிவாரப் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வந்தனர்.

palani Jayaprakash

இந்த வழக்கு விஸ்வரூபமானதால் தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் சிப சிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இவ்வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மற்றும் பழனியில் முகாமிட்ட சிபிசிஐடி போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை பிரமுகர் விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய மடத்துக்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரை சேர்ந்த சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன், ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பத்திர எழுத்தரும், இடைத்தரகருமான ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ், கடந்த மாதம் 7ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என குற்றவியல் நீதிமன்றம் 2ல் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் மெஜிஸ்ட்ரேட் ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஒரு நாள் போதுமானதாக இல்லை, வழக்கு தொடர்பான சந்தேகங்களுக்கு போதுமான பதில்கள் கிடைக்கவில்லை
எனக் கூறி ஒரு வாரம் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிபதி பத்மநாதன் முன்பு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 24ம் தேதி மதியம் ஒரு மணி வரை என மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து சிபிசிஐடி போலீசார் ஜெயபிரகாஷை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டில் இருந்த 2 கம்ப்யூட்டர், CPU மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் பல உண்மைகள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் ஜெயப்பிரகாஷை சிபிசிஐடி போலீசார் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர்.

மேலும் ஜெயப்பிரகாஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

English summary

Jayaprakash, document writer in Palani land scam issue was produced in the court after police custody.

Read More

Previous Post

மைத்ரேயி ராமகிருஷ்ணனின் ஒற்றை வார்த்தை | Tamilmirror Online

Next Post

LIC-ன் ஜாக்பாட் திட்டம்; வாழ்நாள் முழுவதும் ரூ.25,000 ஓய்வூதியம்.. ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! | Pension Plan | வணிகம் போட்டோகேலரி

Next Post
LIC-ன் ஜாக்பாட் திட்டம்; வாழ்நாள் முழுவதும் ரூ.25,000 ஓய்வூதியம்.. ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! | Pension Plan | வணிகம் போட்டோகேலரி

LIC-ன் ஜாக்பாட் திட்டம்; வாழ்நாள் முழுவதும் ரூ.25,000 ஓய்வூதியம்.. ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! | Pension Plan | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin