Last Updated:
மனிதகுலத்தின் நன்மைக்காக AI தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அது மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை உறுதி செய்யவும் இரு நாடுகளுக்கும் கடமையும் திறனும் உள்ளதாக ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை அமெரிக்காவும், சீனாவும் உறுதி செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்பிடம் சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
2015-ஆம் ஆண்டுக்குப் பின்னர், சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மேரிலாந்து விமானப் படை தளத்தில் வந்து இறங்கிய ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்கா மற்றும் சீனாவின் ஒத்துழைப்பு இல்லாமல், உலகின் பல பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமாக இருக்கும் என்று கூறினார். அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்ய வருவதை வரவேற்பதாகவும், அதேபோல், அமெரிக்காவில் உள்ள சீன நிறுவனங்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
மனிதகுலத்தின் நன்மைக்காக AI தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அது மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை உறுதி செய்யவும் இரு நாடுகளுக்கும் கடமையும் திறனும் உள்ளதாக ஷி ஜின்பிங் தெரிவித்தார். அதன்பின் வெள்ளை மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபருக்கான அதிநவீன ஹெலிகாப்டருக்குள் ஷி ஜின்பிங்கை டிரம்ப் அழைத்துச் சென்று காண்பித்தார். அதைத்தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் சீன அதிபருக்கும் தனக்கும் ஒரு சிறப்பான சந்திப்பு நடந்ததாகப் பதிவிட்டுள்ளார்.

