• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

400 மீ. கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்ற இந்தியா.. 2 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் ஊக்கத் தொகை… | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
400 மீ. கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்ற இந்தியா.. 2 தமிழக வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் ஊக்கத் தொகை… | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 24, 2026 9:29 PM IST

இந்திய அணி 3:14.46 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

News18
News18

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 400 மீட்டர் கலப்பு அணி பிரிவில் 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. தமிழக வீரர்கள் 2 பேருக்கு தலா 50 லட்சம் ஊக்கத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் பிரிவில், இந்தியா தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. தடகளப் போட்டிகளின் தொடக்க நாளான வியாழக்கிழமையன்று இந்திய வீரர்கள் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

கலப்பு 4×400 மீட்டர் ரிலே இறுதிப் போட்டியில் மச்செட்டிரா பூவம்மா, தமிழக வீரர்கள் விஷால் தென்னரசு, வித்யா ராம்ராஜ், தெக்கினலில் மனு ஆகியோர் இந்திய அணி 3:14.46 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

இப்போட்டியில் பஹ்ரைன் அணி (3:12.87) தங்கம் வென்று புதிய ஆசிய விளையாட்டு சாதனை படைத்தது. வியட்நாம் அணி (3:14.54) வெண்கலப் பதக்கம் பெற்றது.

இந்நிலையில் வெள்ளி வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள் 2 பேருக்கு தலா ரூ. 50 லட்சத்தை ஊக்கத் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்திய அணியின் 4 நபர் அடங்கிய இந்தக் கலப்பு தொடர் ஓட்டக் குழுவில், 2 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமில்லாமல், தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும். தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘ELITE Sportsperson Scheme’ திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் இருவரும் தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும்… pic.twitter.com/bjRIMvtfyp


— CMOTamilNadu (@CMOTamilnadu) September 24, 2026

இவர்களது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இவர்களின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைத்திட வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

“ஞானேஷ் குமாரை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி! மக்களுக்கு எதிர்ப்பு மனநிலையே வரவில்லையே?” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin