• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Exclusive | வீரமணி விவகாரம்; ஜான்பாண்டியன் Vs ரஞ்சன் குமார்! இருவரும் சொல்லும் விளக்கங்கள் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Exclusive | வீரமணி விவகாரம்; ஜான்பாண்டியன் Vs ரஞ்சன் குமார்! இருவரும் சொல்லும் விளக்கங்கள் என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறுமிகள் பாலியல் வழக்கில் கைதான ஜெம் கிரானைட் வீரமணியிடம் பணம் பறிக்க உதவியாளர் சாந்தியும், காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரும் அணுகினர் என நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

நியூஸ்18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ஜான்பாண்டியன் கூறியதாவது; “நான் மிரட்டியதாகச் சொல்லும் அவர்கள், புகார் கொடுக்காமல் ஏன் என்னிடம் வந்தார்கள்? இரண்டரை வருடமாக தூங்கிக்கொண்டா இருந்தார்கள். ஏன் ரஞ்சனும், சாந்தியும் சும்மா இருந்தார்கள்? ஒரு அரசியல் பிரமுகர் என்னைத் தொடர்புக்கொண்டு, தலைவர் ரஞ்சன் உங்களைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். குடும்பப் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று முறையிட்டார்கள். சரி என தாஜ் ஹோட்டலுக்கு வரச் சொல்லுங்கள் என வரவழைத்தேன்.

ஜான்பாண்டியன்

அங்கு அவர்தான் சாந்தியை அழைத்து வந்தார். அப்போதுதான் இருவரும் முதல்முறையாக சந்தித்தோம். அந்தச் சந்திப்பில், வீரமணி என்பவர் இந்தப் பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் எனப் புகார் சொல்லி, வீரமணியிடம் பேசி ரூ. 20 கோடி வாங்கிக் கொடுங்கள் எனத் தெரிவித்தனர். அதற்கு நான் இதனை எல்லாம் செய்ய முடியாது எனத் தெரிவித்துவிட்டேன். அதன்பிறகு அவர்களுடன் எனக்குத் தொடர்பு இல்லை. ஆனால், ஏன் தற்போது என் பெயரை இழுக்கிறார்கள் எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் நியூஸ்18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஜான்பாண்டியன் தன்னை மிரட்டியதாக சாந்தி கூறியதாகவும், அதன்பிறகு சமரசம் ஏற்படுத்தவே ஜான்பாண்டியன் – சாந்தி சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நியூஸ்18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ரஞ்சன் குமார் கூறியதாவது; “கூடுதல் ஆணையர் கண்ணனிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தேன். அவர் ஆணையரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் எனத் தெரிவித்தார். நான் கொடுத்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.

2025ஆம் ஆண்டு மறுநாளே வழக்குப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் ரகுபதி சொல்கிறார். ஆனால், ஏன் 2024ல் நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை? நான் கொடுத்த ஆதாரங்களையும் காட்டாமல், என்.ஜி.ஓ. கொடுத்ததாக ஏன் மாற்றினார்கள்? ஆதாரங்களை சாந்தியிடம் இருந்துதான் பெற்றேன்.

ரஞ்சன் குமார்

எனக்கு ஒருவர் பணம் தரவேண்டும். அதற்காக நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு ஜான்பாண்டியன் என்னையும், வக்கீலையும் வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார் என சாந்தி என்னை அணுகினார். அதற்கு நான் வசூல் செய்யும் ஆள் இல்லை என சாந்தியிடம் சொன்னபோது அவர், நானும் அப்படி உங்களைப் பார்க்கவில்லை. என்னை தப்பாகப் புரிந்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்குதான் உங்களை அழைக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதன் காரணமாகவே ஜான்பாண்டியனைச் சந்தித்தேன். அப்போது ஜான்பாண்டியனும், சாந்தியும் பேசியபோதுதான், சாந்தியும் ஜெம் வீரமணியும் யார்? என்ன விவரம் என்பதெல்லாம் எனக்குத் தெரியவந்தது. அத்துடன் நான் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். ரூ. 20 கோடி கேட்டு நான் ஜான்பாண்டியனை அணுகியிருந்தால் நான் ஏன் ஆதாரங்களை கொடுத்து புகார் கொடுக்கப்போகிறேன்?” எனத் தெரிவித்தார்.

Read More

Previous Post

சீன ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்தார் ட்ரம்ப்

Next Post

Gold Rate: சர்ரென சரிந்த தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு இவ்வளவு சரிவா? | Today’s Gold Rate: 22K Gold Down ₹400 Per Sovereign in Tamil Nadu

Next Post
Gold Rate: சர்ரென சரிந்த தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு இவ்வளவு சரிவா? | Today’s Gold Rate: 22K Gold Down ₹400 Per Sovereign in Tamil Nadu

Gold Rate: சர்ரென சரிந்த தங்கம் விலை.. 3 நாட்களில் சவரனுக்கு இவ்வளவு சரிவா? | Today’s Gold Rate: 22K Gold Down ₹400 Per Sovereign in Tamil Nadu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin