• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Layoff செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கும் அமேசான்..!! | Amazon Rehiring Laid-Off Employees for AI and Cloud Jobs: What Is the ‘Boomerang’ Hiring Initiative?

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Layoff செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கும் அமேசான்..!! | Amazon Rehiring Laid-Off Employees for AI and Cloud Jobs: What Is the ‘Boomerang’ Hiring Initiative?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Layoff செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கும் அமேசான்..!!

உலக புகழ்பெற்ற டெக் நிறுவனமான அமேசான் கடந்த சில ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஆனால் திடீர் மனமாற்றமாக அந்த ஊழியர்களையே மீண்டும் பணிக்கு எடுத்து வருகிறது.

அமேசான் கடந்த ஓராண்டு காலமாகவே கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. கிட்டதட்ட 30,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. இந்நிலையில், வேலை இழந்து வெளியேறிய முன்னாள் ஊழியர்களை தொடர்புகொண்டு மீண்டும் பணியில் அமர்த்தி வருகிறது. ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறைகளில் காலியாக உள்ள புதிய பணியிடங்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திடீர் திருப்பம் தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Layoff செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கும் அமேசான்..!!

அமேசானின் AI ஏஜென்ட் குழுவில், AWS (Amazon Web Services) நிறுவனத்தின் துணை தலைவராக சுவாமி சிவசுப்பிரமணியன் செயல்பட்டு வருகிறார். இவரது முயற்சியின் கீழ் பழைய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு Swami’s Boomerang Reengagement Initiative என பெயரிட்டுள்ளனர்.

அமேசானின் இந்த நடவடிக்கையானது ஏஐ துறையில் மட்டுமே இல்லை, நிதிப்பிரிவு உள்பட பிற துறைகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மீண்டும் அமேசானில் வேலைக்கு திரும்ப விரும்பும் அந்த முன்னாள் ஊழியர்களுக்கு விரைவான நேர்காணல் முறை மற்றும் சுலபமான வழிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுவதாக மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நிறுவனத்தின் வேலைச்சூழல் குறித்து நன்கு அறிந்தவர்கள் என்பதால் இந்த விரைவான பணி அமர்த்தல் முறை பின்பற்றப்படுகிறது. இதில் பெரும்பாலும் ஏஐ மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏற்கனவே கூகுள் , ஓபன் ஏஐ, மெட்டா மற்றும் ஆந்த்ரோபிக் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏஐ திறமையாளர்களை ஈர்ப்பதற்கான கடுமையான முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த போட்டி சூழலை சமாளிக்கவே தங்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான மற்றும் திறமையான முன்னாள் ஊழியர்களை தேடி பிடித்து மீண்டும் பணியில் அமர்த்தும் வியூகத்தை அமேசான் கையில் எடுத்துள்ளது.

இது குறித்து பேசிய அமேசான் நிறுவனத்தின் செய்திப்பொடர்பாளர் ஹேலி சில்வா பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், ராஜினாமா செய்தவர்களை மீண்டும் பணியமர்த்துவது எங்கள் நிறுவனத்தில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்றுதான் என கூறியுள்ளார். பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து முன்னாள் ஊழியர்களும் இந்த வாய்ப்பு இல்லை யாரெல்லாம் அதற்கான திறன்களை வெளிப்படுத்துகிறார்களோ அவர்களுக்கே இந்த வாய்ப்பு என கூறியுள்ளார்.

திறமையான நபர்களை எப்போதும் தக்க வைத்து கொள்ளவே அமேசான் விரும்புவதாக அவர் கூறியுள்ளார். எனவே அமேசான் போன்ற நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் வளர்ந்து வரும் துறைகளில் திறமையை மேம்படுத்தி கொண்டால் மீண்டும் அதே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சான்றாக மாறி இருக்கிறது.

Share This Article

English summary

Amazon Rehiring Laid-Off Employees for AI and Cloud Jobs: What Is the ‘Boomerang’ Hiring Initiative?

Layoff செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அழைக்கும் அமேசான்..!! / Amazon is reaching out to some former employees, including workers affected by its recent layoffs, to apply for open positions in artificial intelligence, machine learning and cloud computing.

Story first published: Thursday, September 24, 2026, 9:44 [IST]

Other articles published on Sep 24, 2026

Read More

Previous Post

“பணம் தந்தால் மட்டுமே பதவி..” மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை.. மனைவி கண்ணீர் | TVK Functionary Parandhaman Dies by Suicide in Rameswaram, Wife Alleges Party Post Dispute

Next Post

"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

Next Post
"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

"ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin