அதில் ரயிலை பின்னோக்கி ஓட வைப்பது, காற்றில் பறக்கும் சுமோ கார்கள், ஹெலிகாப்டர் ஸ்டண்ட்கள் என பாலய்யாவின் திரைப்படக் காட்சிகள், தெலுங்கு மட்டுமின்றி நாடு முழுவதும் மீம் உலகில் பிரபலமான டெம்ப்ளேட்டுகளாக மாறியுள்ளன. இந்நிலையில், பாலய்யாவின் இந்த மீம்ஸ் தற்போது இந்தியாவைக் கடந்து சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது.

