• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

துடிதுடித்து பலியான இந்தியர்.. ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல் – பதற்றம் | Indian sailor killed in attack on bulk carrier ship near Oman

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
துடிதுடித்து பலியான இந்தியர்.. ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல் – பதற்றம் | Indian sailor killed in attack on bulk carrier ship near Oman
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Wednesday, September 23, 2026, 20:43 [IST]

மஸ்கட்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது ஓமன் அருகே திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலில் பணியாற்றி இந்தியர் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் 19 இந்தியர்கள் உள்பட 27 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

indian-sailor-killed-in-attack-on-bulk-carrier-ship-near-oman

ஐக்கிய அரபு அமீரகத்தின் மினா சாகிர் துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு ‘எம்வி கேப் டாவோ’ என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் புறப்பட்டது. ஆண்டிகுவா மற்றும் பார்புடா கொடியுடன் இந்த கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது.

ஓமன் அருகே வந்து கொண்டிருந்தபோது கப்பலில் திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டது. வேகமாக வந்த 2 ‘டார்பிடோஸ்கள்’ அடுத்தடுத்து கப்பலில் மோதின.

கப்பலில் போர்ட் சைட் சி – டெக் (தங்குமிடம் ) மற்றும் போர்ட் சைட் ஹல் (இன்ஜின் ரூம்) ஆகியவற்றில் ‘டார்பிடோஸ்கள்’ மோதியதால் தீப்பற்றி எரிந்தன. இந்த கப்பலில் மொத்தம் 28 பேர் பயணித்தனர். இதில் 20 பேர் இந்தியர்கள். இதில் ஒருவர் துடிதுடித்து இறந்தார். இந்தியரான உத்தர பிரதேச மாநிலம் தியோரியாவை சேர்ந்த சுராஜ் யாதவ் என்பவர் இந்த தாக்குதலில் பரிதாபமாக பலியானார்.

கப்பலில் போர்த் இன்ஜினியராக பணியாற்றி வரும் தேவ்ராஜ் என்ற இந்தியர் லேசான காயமடைந்துள்ளனர். இதையடுத்து கப்பலில் இருந்த அனைவரையும் ஓமன் கடற்படையினர் காப்பாற்றினர். 19 இந்தியர்கள் உள்பட மொத்தம் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் ஜெட்டி எனும் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட எக்ஸ் பதிவில், ”இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியாகி இருப்பதை நினைத்து நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கெள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

English summary

A cargo ship traveling from the United Arab Emirates to India was suddenly attacked near Oman. While one Indian crew member lost his life in the incident, 27 crew members-including 19 Indians-were safely rescued.

Read More

Previous Post

வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம்

Next Post

LPG Gas | கேஸ் குழாயை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post
LPG Gas | கேஸ் குழாயை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

LPG Gas | கேஸ் குழாயை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin