கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு குளம் பகுதியில், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் செவ்வாய்க்கிழமை (22) பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தைச் சுற்றிவளைத்தனர்.
பொலிஸாரைக் கண்டதும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு கசிப்பு காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 10 பெரல்கள் நிரம்பிய கோடாவை பொலிஸார் கைப்பற்றி முற்ற ol தாக அழித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திலிருந்த வெற்றுப் பெரல்களை மீட்டெடுத்துப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராஜா சரவணன்

