• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை.. பழைய ஓய்வூதியம்.. வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? | Five-day work week, Old Pension Scheme : Will the Central Government accept bank employees’ demands?

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை.. பழைய ஓய்வூதியம்.. வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? | Five-day work week, Old Pension Scheme : Will the Central Government accept bank employees’ demands?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Published: Wednesday, September 23, 2026, 17:15 [IST]

சென்னை: வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை முறையை வங்கிகளில் அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தற்காலிகமாக பணியோற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

செப்டம்பர் 26ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்று விடுமுறை, அடுத்த நாள் செப்டம்பர் 27ம் தேதி ஞாயிறு என ஒட்டுமொத்தமாக ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்பட இருக்கிறது. இதை உணர்ந்து அரசு, செப்டம்பர் 27ம் தேதி ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என அறிவித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய நிபந்தனைகளான வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை.. பழைய ஓய்வூதியம் போன்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா என்பது தான். அதுபற்றி பார்ப்போம்.

Five-day work week Old Pension Scheme Will the Central Government accept bank employees demands

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

வங்கிகளின் வேலை நாட்களை வாரத்துக்கு ஐந்து நாட்களாக குறைப்பது, பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 26ம் தேதி முதல் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான. யு.எப்.பி.யு., அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்து உள்ளது. இதில் நாம் முதல் பாராவில் சொன்னது போலவே சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையால் ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், வரும் 30 ம் தேதி அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால், பணப்பரிவர்த்தனை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

5 நாட்கள் பேங்க் லீவு? ரிசர்வ் வங்கி போட்ட புது உத்தரவு.. சண்டே வங்கிகள் செயல்படும்!

5 நாட்கள் பேங்க் லீவு? ரிசர்வ் வங்கி போட்ட புது உத்தரவு.. சண்டே வங்கிகள் செயல்படும்!

செப்டம்பர் 27 ஞாயிறு வங்கிகள் இயங்கும்

இந்த சூழலில் தான் மத்திய அரசு வரும் செப்டம்பர் 27ம் தேதி ஞாயிறு அன்று வேலை நாளாக அறிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பதை தடுக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அன்று அனைத்து தேசிய வங்கிகளும், கிராமப்புற வங்கிகளும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வங்கி ஊழியர்களின் போராட்டத்தின் பாதிப்பை குறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

மத்திய அரசு மறுப்பது ஏன்

வங்கி ஊழியர்களின் இரண்டு கோரிக்கைகளை மத்திய அரசு நீண்ட நாட்களாக ஏற்க மறுத்து வருகிறது. அந்த கோரிக்கை பற்றி பார்ப்போம். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வைத்துள்ளார்கள். ஏற்கனவே இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வங்கிகள் சனிக்கிழமைகளில் இயங்குவது இல்லை.. இந்த சூழலில் ஒவ்வொரு வாரமும் வாரத்தில் ஐந்து நாட்கள் தான் இயங்கும் என்ற நிலை வந்தால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும். என்னதான் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம், கணிணி மயம் என்று வந்தாலும், செக் கிளியரன்ஸ், கடன் சேவைகள், அதிக ரொக்க பரிமாற்றம் உள்பட வணிகம் சார்ந்த சேவைகளுக்கு கண்டிப்பாக வங்கிகளின் சேவை மிக அவசியம்.

toxic ott.. யானைக்கும் அடி சறுக்கும்.. யாஷ் இதனை இனி எப்போதுமே மறக்க மாட்டார்

toxic ott.. யானைக்கும் அடி சறுக்கும்.. யாஷ் இதனை இனி எப்போதுமே மறக்க மாட்டார்

ரிசர்வ் வங்கி கவலை

அதேபோல் நாட்டின் நிதிச் சுழற்சி மற்றும் பணப்புழக்கத்தை சீராக வைத்திருக்க ரிசர்வ் வங்கி விரும்புகிறது. சனிக்கிழமைகளில் வங்கிகள் முழுமையாக மூடப்பட்டால், பணப் பரிவர்த்தனைகள் முடங்கி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கவலைப்படுகிறது. அதேபோல் அரசுத் திட்டங்களுக்கான நிதிப் பகிர்வு, வரிகள் வசூல் மற்றும் கடன் வழங்கும் முகாம்கள் போன்றவை பெரும்பாலும் வார இறுதியில் நடைபெறுவதால் அரசும் ஒப்புக்கொள்ள வாய்ப்பு கிடையாது. அதேபோல் சனிஞாயிறு விடுமுறை என்றால், முதல் நாள் வெள்ளி அன்றோ அல்லது அடுத்த திங்கள் அன்றோ விடுமுறை வந்தால், 3 அல்லது, நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கி சேவைகள் பாதிக்கும். வணிகர்கள் ரொக்கத்தை தங்கள் கையில் நான்கு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டியது வரும். அதேபோல் செக்குகள் தேங்குகள் நிறைய நடைமுறைசிக்கல்கள்வரும் என்பதால் அரசு வாரம் இரண்டு நாள் விடுமுறையை ஏற்க மறுக்கிறது.

பழைய ஓய்வூதியம்

அதேபோல் பழைய ஓய்வூதியம் திட்டத்தையும் மத்திய அரசு ஏற்கவே இல்லை… பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் இருந்து எந்தப் பங்களிப்பும் தந்தது இல்லை. அதாவது அவர்களிடம் பணம் பிடிக்கப்படாது. அத்துடன் அரசுதான் அவர்களின் ஓய்வூதியத்தை முழுமையாகத் தன் கருவூலத்தில் இருந்து தந்தது. எனவே தான் பழைய ஓய்வூதிய திட்டமே ரத்து செய்யப்பட்டது. அரசு ஓய்வூதியத்திற்கு பணத்தை ஒதுக்குவதே மிகப்பெரிய நிதிப் சுமையாக மாறுவதால், மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அரசு ஒரு நாளும் ஏற்காது என்பதே எதார்த்தமான உண்மை.

English summary

Will the Central Government accept the bank employees’ demands to implement a five-day work week, restore the old pension scheme, fill vacancies, and regularize the services of temporary employees?

Read More

Previous Post

13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

Next Post

இபிஎஃப்ஓ ஊதிய உச்சவரம்பு ₹25,000-ஆக உயர்வு: ஊழியர்களைப் பதிவு செய்ய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் | வணிகச் செய்திகள்

Next Post
இபிஎஃப்ஓ ஊதிய உச்சவரம்பு ₹25,000-ஆக உயர்வு: ஊழியர்களைப் பதிவு செய்ய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் | வணிகச் செய்திகள்

இபிஎஃப்ஓ ஊதிய உச்சவரம்பு ₹25,000-ஆக உயர்வு: ஊழியர்களைப் பதிவு செய்ய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin