• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

96வது தேசிய தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் சவுதி அரேபியா

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
96வது தேசிய தினத்தை விமர்சையாகக் கொண்டாடும் சவுதி அரேபியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தீன் பி.ஏ. மதனி


பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,


கொழும்பு.


“இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் இப்னு சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபிய துணைத் தூதுவர் யாசிர் அப்துர் ரஹ்மான் அல் ஹாஸிமி ஆகியோருக்கும், சவுதி அரேபிய நாட்டு மக்களுக்கும் சவுதி அரேபியாவின் 96வது தேசிய தினத்தை முன்னிட்டுத் தனிப்பட்ட ரீதியிலும், எமது நிறுவனம் சார்பாகவும், இலங்கை மக்கள் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.”


“பொருளாதார ரீதியிலும் அபிவிருத்தியிலும் பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்ததோடு, மனிதாபிமானத்தில் என்றும் முன்நிற்கின்ற சவுதி அரேபியாவின் அபார வளர்ச்சியைக்ண்டும் பெருமிதம் அடைகின்றோம்!”


முன்னேற்றம், பாரிய வளர்ச்சி, மறுமலர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய எண்ணற்ற சாதனைகள் மூலம் சவுதி அரேபியா உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், சவுதி அரேபிய மன்னரதும் இளவரசரதும் சிந்தனையில் உதயமான ‘நியோம்’, ‘த லைன்’, ‘விஷன் 2030’, ‘2030 எக்ஸ்போ’ போன்ற பாரிய பொருளாதாரத் திட்டங்கள் சவுதியின் நற்பெயரைப் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் மென்மேலும் உயர்த்தியுள்ளன.


சவுதி அரேபியாவின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் மூலகர்த்தா மன்னர் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆவார். அவருக்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைவரும் சவுதியின் அபரிமித அபிவிருத்திக்கு அயராது உழைத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.



பொருளாதார ரீதியில் இவ்வாறு பாரிய வளர்ச்சியடைந்திருக்கும் சவுதிக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவானது மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அந்த வகையில், இலங்கைக்குப் பாரிய உதவி ஒத்துழைப்புகளை நல்கி வருகிறது சவுதி அரேபியா.



குறிப்பாக, சவுதியின் நிதியுதவியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காக்கை வலிப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்கவென அதிநவீன வசதிகள் கொண்ட நரம்பியல் சிகிச்சை பிரிவு, இலங்கையிலேயே மிக நீளமான கிண்ணியா பாலம், பதுளை – செங்கலடி மற்றும் மஹியங்கனை நெடுஞ்சாலை, வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் நகரமயமாக்கல் சூழலை உருவாக்குவதற்காகவும் பல நவீன கட்டிடங்களும் வசதிகளும் நிர்மாணிக்கப்பட்டன.



மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் கற்றல் தேவைகளுக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய நூலகக் கட்டிடம், பல்கலைக்கழகத்திற்கும் வணிகச் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் மையம், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் நகர வசதிகள் மையம், கல்விப் பணியாளர்களுக்கான தங்கும் விடுதிகள் (Academic Staff Quarters), நிர்வாகப் பணியாளர்களுக்கான தங்கும் விடுதிகள் (Executive Staff Quarters), கல்விசாரா ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகள் (Non-Academic Staff Quarters), துணைவேந்தர் உத்தியோகபூர்வ இல்லம் என்பன இந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வயம்ப பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டன.



அதேநேரம், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் 500 மாணவர்களுக்கான விடுதிகள், 1,060 இருக்கைகள் கொண்ட அரங்கம், 6 விரிவுரை மண்டபங்கள், நூலகம் மற்றும் நவீன ஆய்வகங்களை உள்ளடக்கிய புதிய மருத்துவ பீட வளாகம் அமைக்கப்பட்டு கடந்த ஜூலையில் திறந்து வைக்கப்பட்டது.


மேலும், இலங்கைக்குப் பல்வேறு விதமான மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்கி வருகிறது சவுதி அரேபியா. குறிப்பாக, சுனாமி அனர்த்தத்தின் போதும் கொரோனா பாதிப்புகளின் போதும் தாராளமாக உதவியுள்ள சவுதி, கடந்த ஆண்டு தித்வா புயலின் விளைவாகப் பாதிக்கப்பட்ட வீதிகளைப் புனரமைக்கவென மேலதிகமாக ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியது.


இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையருக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ள சவுதி அரேபியாவின் சுற்றுலாப் பயணிகளது வருகையும் இலங்கைப் பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்தது.



இவை இவ்வாறிருக்க, சவுதி அரேபியப் பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் உயர்கல்வியைத் தொடரவென ஒவ்வொரு வருடமும் புலமைப்பரிசில்கள், நோன்பு காலங்களில் இலவசமாக விநியோகிக்கவென தொன்கள் கணக்கில் இலவசமாகப் பேரீச்சம்பழங்கள், பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்துக்கு 300 தொன் பேரீச்சம்பழங்கள், இலங்கையில் முதற்தடவையாகப் பெருந்தொகை பணப்பரிசில்களுடன் கூடிய அல் குர்ஆன் மனனப் போட்டி, இலங்கை – சவுதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு ஒன்றியம், இலங்கை – சவுதி அரேபிய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தங்கள், “எல்லைகள் இல்லாத மனித நேயத்தை நோக்கி…” என்ற தொனிப்பொருளில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் மூலம் இலங்கையில் இனப்பாகுபாடின்றி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்களை நடத்திப் பார்வை இழந்துள்ளவர்களுக்குப் பார்வை பெற்றுக்கொடுக்கின்றமை, சூடான் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான இலங்கையரை மீட்டெடுத்து எமது நாட்டுக்கு அனுப்பி வைத்தமை, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அனைத்து முன்னெடுப்புகளிலும் இலங்கையின் பக்கம் நின்றமை என எண்ணிலடங்கா உதவி ஒத்துழைப்புகளை நல்கி வருகின்றது சவுதி அரேபியா.


அத்தோடு, இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தி மேம்படுத்துவதில் முன்னாள் தூதுவரான காலித் ஹமூத் அல் கஹ்தானி ஆற்றியுள்ள பங்களிப்புகளும் என்றும் நினைவுகூரத்தக்கவையாகும்.



மத்திய கிழக்கில் பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சிகளைப் பெற்றுள்ள சவுதி, முஸ்லிம்கள் தங்கள் பிரதான மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் இரு முக்கிய புனிதஸ்தலங்களைக் கொண்ட தேசமாகவும் திகழ்கிறது. அதனால், மத்திய கிழக்கில் மாத்திரமல்லாமல் முழு உலகிலும் சவுதி தனி மதிப்பையும் மரியாதையையும் பெற்று விளங்குகிறது.


உலக முஸ்லிம்களின் சகல விடயங்களிலும் அக்கறை செலுத்தி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் முன்நிற்கின்ற நாடாக விளங்குகிறது சவுதி. அத்தோடு நில்லாது, முஸ்லிம் அல்லாத நாடுகளின் நலன் விடயங்களிலும் சவுதி மிகுந்த அக்கறை செலுத்தி அந்தந்த நாடுகளோடு பரஸ்பர உறவுகளைப் பேணி வருகிறது. உலக வல்லரசு நாடுகளுடன் மிகவும் வலுவான உறவுகளைப் பேணிவரக்கூடிய நாடாகவும் சவுதி இருக்கிறது. அதனால் தான், வல்லரசு நாடுகள் கூட சவுதி அரேபியாவின் தயவை நாடி நிற்கின்றன எனலாம்.


தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கியெறிந்து சகிப்புத்தன்மையையும் சகவாழ்வையும் உலகில் நிலைநாட்டிய மிகச் சிறந்த நாடாகவும், போதை ஒழிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பில் வெற்றி கண்ட நாடாகவும் விளங்கும் சவுதி, தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டும் நோக்கிலான சர்வதேச மாநாடுகளைச் சவுதி அரேபியாவிலும் உலகின் பல நாடுகளிலும் வருடாவருடம் தொடர்ந்தும் நடத்தி வருகிறது. இதன் நிமித்தம் புனித மக்காவிலும் சர்வதேச மாநாடுகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.



அத்தோடு நில்லாது, நிர்க்கதியான நாடுகளுக்கு உதவுதல், அந்நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவென அந்நாடுகளின் திறைசேரிகளில் வட்டியில்லா நீண்டகாலத் தவணையில் கடன் அடிப்படையில் பல பில்லியன்களை வைப்பிலிடுதல், உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் தலையிட்டு அங்கு சமாதானத்தை ஏற்படுத்த உதவுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் சவுதி தவறுவதில்லை.


பலஸ்தீன் மற்றும் யெமன் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் சாதனை படைக்கும் நாடாகவும் விளங்குகிறது சவுதி அரேபியா. அதேவேளை, நவீன கண்டுபிடிப்புகள், ஏ.ஐ. தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு போன்றவற்றிலும் சவுதி அரேபியா பெரிதும் முன்னேற்றமடைந்த நாடாக உள்ளது. இது தொடர்பான சர்வதேச மாநாடுகளை நடத்தி உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளவும் செய்கிறது சவுதி.


சவுதி அரேபியா அரசியலில் மிகப் பலம் வாய்ந்த நாடாகும். குறிப்பாக, “மத்திய கிழக்கின் ராஜா” என்றால் கூட அது மிகப் பொருத்தமானது. ஏனெனில், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் அடங்கலாக உலக முஸ்லிம் நாடுகளும் சவுதி அரேபியாவைத் தங்களது தலைமைத்துவ நாடாகப் பார்க்கின்றன.


சவுதி அரேபியாவைப் பொருளாதார மற்றும் இதர அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆரம்பித்த ‘விஷன் 2030’, ‘எக்ஸ்போ 2030’ போன்றன இதில் பாரிய மைல்கற்களாகும். சவுதியின் ‘விஷன் 2030’ என்பது ஒரு துடிப்பானதும் வளமானதுமான பொருளாதாரம் மற்றும் இலட்சிய தேசத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பயணத்துக்கான ஒரு வரைபடமாகும். அதேபோல், ‘எக்ஸ்போ 2030’ முன்னோடியான வகையில் தேசிய மாற்றத்தை அடைவதற்கான சவுதி அரேபியாவுக்குக் கிடைக்கவிருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.


சவுதி பொருளாதார ரீதியில் தன்னிறைவடைந்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரத்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற மிகப் பெரும் வல்லரசுகள் சவுதியின் பொருளாதாரக் கொள்கையோடு இணைந்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவென மிக நெருக்கமாகச் செயற்படுகின்றன. இதற்குச் சவுதி – பிரான்ஸ், சவுதி – சீனா, சவுதி – ரஷ்யா, சவுதி – பிரத்தானியா மற்றும் அண்மையில் நடந்த சவுதி – இந்தியா ஜி-20 பொருளாதார உச்ச மாநாடுகளை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். சுருங்கக் கூறின், சவுதி அரேபிய அரசு உலகில் அனைத்து நாடுகளுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தாக்கம் செலுத்தும் மிக முக்கியமான நாடாகத் திகழ்கிறது.


உலகிலுள்ள பெற்றோலிய வள நாடுகளில் ஒன்றாக இருந்த போதிலும், பெற்றோலிய வளம் சாராத உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சவுதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இரு புனிதப் பள்ளிவாசல்களின் காவலரும் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோர் இவ்விடத்தில் அதிக அக்கறை எடுத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், இவர்கள் பதவிக்கு வந்த பின்னர் சவுதியின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இவ்வாறான சூழலில், சவுதி அரேபியா தனது 96வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. இதன் நிமித்தம் இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், பட்டத்து இளவரசர் முஹம்மத் இப்னு சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபிய துணைத் தூதுவர் யாசிர் அப்துர் ரஹ்மான் அல் ஹாஸிமி ஆகியோருக்கும் சவுதி அரேபிய மக்கள் அனைவருக்கும் தனிப்பட்ட ரீதியிலும், எமது நிறுவனம் சார்பாகவும், இலங்கை மக்கள் சார்பாகவும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களுக்கு ஈடேற்றமான வாழ்வையும், நீண்ட ஆயுளையும், சிறப்பான எதிர்காலத்தையும் தந்து, மென்மேலும் உலக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய நல்ல திடகாத்திரத்தைத் தரவும், சவுதி – இலங்கை நட்புறவு என்றும் நிலைத்து வலுவானதாக இருக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்!


 


 


 



Read More

Previous Post

செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் அடுத்தக்கட்ட வாய்ப்பு எப்படி? | Makkal Osai

Next Post

Gold Price | தொடர் சரிவில் தங்கம்… தீபாவளிக்கு முன் தங்கம் விலை மேலும் குறையுமா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price | தொடர் சரிவில் தங்கம்… தீபாவளிக்கு முன் தங்கம் விலை மேலும் குறையுமா? | வணிகம் போட்டோகேலரி

Gold Price | தொடர் சரிவில் தங்கம்... தீபாவளிக்கு முன் தங்கம் விலை மேலும் குறையுமா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin