இந்திய கால்பந்து ஜாம்பாவான் சுனில் சேத்ரி ஓய்வை அறிவித்தார்.
2002ஆம் ஆண்டு பிரபல கிளப் அணிகளில் ஒன்றான மோகன் பகான் அணியுடன் தனது கால்பந்து பயணத்தை தொடங்கினார் சுனில் சேத்ரி. அதன்பின் 2005ஆம் ஆண்டு சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அறிமுகமான நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து சாதனை படைத்தார். இவர் இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 94 கோல்களை விளாசி இருக்கிறார். இதன் மூலம் உலகிலேயே அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளார்.
இந்நிலையில் 39 வயதாகும் சுனில் சேத்ரி தனது கால்பந்து வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக (Retire) சமீபத்தில் அறிவித்தார். அதன்படி இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி, குவைத்துக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க:
பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் ஓவரில் பந்துவீசிய சவுரப் நெட்ராவால்கர் இந்திய உலகக்கோப்பை அணியில் இருந்தவரா? – வெளியான ருசீகர தகவல்!
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தன. எனினும், பந்து வலைக்குள் செல்லவில்லை. போட்டி முடிந்ததும், இந்திய அணி வீரர்கள் சுனில் சேத்ரிக்கு வாழ்த்து தெரிவிக்க காத்திருந்த நிலையில், அவர் கண்ணீர்விட்டு அழுதார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)