• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

MUSE கொடுத்த ஸ்வீட் ஜாக்பாட்.. ஒரே நாளில் 25 பில்லியன் டாலர் சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்..! | “Muse AI” Triggers Massive Meta Stock Rally: Mark Zuckerberg’s Net Worth Surges to $253.6 Billion

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
MUSE கொடுத்த ஸ்வீட் ஜாக்பாட்.. ஒரே நாளில் 25 பில்லியன் டாலர் சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்..! | “Muse AI” Triggers Massive Meta Stock Rally: Mark Zuckerberg’s Net Worth Surges to $253.6 Billion
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


MUSE கொடுத்த ஸ்வீட் ஜாக்பாட்.. ஒரே நாளில் 25 பில்லியன் டாலர் சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்..!

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற முக்கிய செயலிகளை நிர்வாகம் செய்யும் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 11.4% உயர்ந்தது மூலம் இந்நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு நேற்று ஒரு நாளில் மட்டும் 25 பில்லியன் டாலக் அதிகரித்து மொத்த சொத்து மதிப்பு 253.6 பில்லியன் டாலராக உயர்ந்தது என போர்ப்ஸ், ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் தரவுகள் கூறுகிறது.

மெட்டா பங்குகள் திங்கள்கிழமை பதிவு செய்த 11.4% உயர்வு என்பது ஏப்ரல் 2025க்குப் பின் மெட்டா பங்குகள் பதிவு செய்த மிகப்பெரிய ஒருநாள் உயர்வாகும். நேற்றைய வர்த்தகத்தில் மெட்டா பங்கு உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்நிறுவனம் புதிய அறிமுகம் செய்த AI அசிஸ்டென்ட் சேவையான Muse.

MUSE கொடுத்த ஸ்வீட் ஜாக்பாட்.. ஒரே நாளில் 25 பில்லியன் டாலர் சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்..!

இந்த புதிய சேவை மீது முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ள ஆர்வம் அதிகரித்த காரணத்தால் Wells Fargo நிறுவனம், மெட்டா பங்குக்கான டார்கெட் விலையை 640 டாலரில் இருந்து 796 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஏஐ முதலீட்டாளர்களும் மெட்டா பங்குள் மீது முதலீட்டைக் குவித்தனர்.

மெட்டாவின் ஏஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளதை உறுதி செய்யும் வகையில் Muse ஏஐ ஆப் அமெரிக்க Apple App Store-ல் முதலிடத்தையும் பிடித்துள்ளது. ஏஐ போட்டியில் மிகவும் தாமதமாக வந்த மெட்டா, மிகுந்த பொருட் செலவில் நிறுவனங்கள் கைப்பற்றுவதும், ஏஐ துறையில் மூத்த அதிகாரிகளை அதிக சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்துவது என கடந்த ஒரு வருடமாக பெரும் முதலீட்டைச் செய்தது.

சில மாதங்களுக்கு முன்பு கூட ஏஐ மீது முதலீடு செய்தது உரிய நேரத்தில் பலன் கொடுக்கவில்லை என மெட்டா உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தாண்டி மெட்டா பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளத்தில் கன்டென்ட், விளம்பரம் தொடர்பான பிரச்சனைகளை உலகம் முழுவதும் எதிர்கொண்ட நிலையில் இதன் பங்கு விலையும் குறைந்தது.

இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செப்டம்பர் 8ஆம் தேதி அமெரிக்காவில் Muse AI assistant-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஏஐ சேவை மக்களின் தினசரி வேலைகளை ஏஐ மூலம் செய்ய உதவுகிறது, உதாரணமாக பஸ், டிரைன் டிக்கெட் புக் செய்வது முதல் அலுவலகத்தில் மேனேஜருக்கு ஈமெயில் அனுப்புவது வரையில் அனைத்திலும் உதவுகிறது, மேலும் இது சாமானிய மக்கள் எளிதாகச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் வரவேற்பு அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.

Muse ஏஐ சேவையைத் தனி செயலியாக மட்டும் அல்லாமல் வாட்ஸ்அப் வழியாகவும் பயன்படுத்தும் முறையைக் கொண்டு உள்ளது. விரைவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாயிலாகவும் Muse பயன்படுத்தும் சேவையைக் கொண்டு வர உள்ளது மெட்டா. Muse-ன் வெற்றி மூலம் தற்போது மார்க் ஜூக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.

Share This Article

English summary

“Muse AI” Triggers Massive Meta Stock Rally: Mark Zuckerberg’s Net Worth Surges to $253.6 Billion

“Muse AI” Triggers Massive Meta Stock Rally: Mark Zuckerberg’s Net Worth Surges to $253.6 Billion — MUSE கொடுத்த ஸ்வீட் ஜாக்பாட்.. ஒரே நாளில் 25 பில்லியன் டாலர் சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்..!

Story first published: Tuesday, September 22, 2026, 20:16 [IST]

Other articles published on Sep 22, 2026

Read More

Previous Post

ஆசிய விளையாட்டு போட்டி : இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது – Malaysiakini

Next Post

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin