(ரெ. மாலினி)
மலாக்கா:
மலாக்கா மாநில முதலமைச்சரும், தேசிய முன்னணி மலாக்கா தலைவருமான டத்தோ ஸ்ரீ உத்தாமா அப்துல் ரவூப் யூசோப், எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தே.மு கூட்டணி நிலைப்பாடு குறித்து பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதற்காக தேமு உடன் மூலோபாய கூட்டாளியாக இணைந்து செயல்பட விரும்பும் எந்தவொரு கட்சிக்கும் தே.மு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பும் என அவர் தெரிவித்தார்.
மேலும், கூட்டணி தொடர்பாக முன்வைக்கப்படும் அனைத்து பரிந்துரைகளும் சம்பந்தப்பட்ட கட்சி மட்டத்தில் கலந்துரையாடலுக்கு கொண்டுச் செல்லப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அப்துல் ரவூப் கூறினார்.
இதனிடையே, மலாக்காவில் தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வ நடைமுறைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



