• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

15 வயதில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள போர்ட்போலியோ.. பங்குச்சந்தை முதலீட்டில் கலக்கும் பள்ளி மாணவி..!! | 15-Year-Old Class 10 Student Builds ₹13.9 Lakh Investment Portfolio: How Sinchana Santosh Started Investing

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
15 வயதில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள போர்ட்போலியோ.. பங்குச்சந்தை முதலீட்டில் கலக்கும் பள்ளி மாணவி..!! | 15-Year-Old Class 10 Student Builds ₹13.9 Lakh Investment Portfolio: How Sinchana Santosh Started Investing
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


15 வயதில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள போர்ட்போலியோ.. பங்குச்சந்தை முதலீட்டில் கலக்கும் பள்ளி மாணவி..!!

பொதுவாக பங்குச்சந்தை என்றாலே பலரும் அச்சப்படுவார்கள். ஆனால் இங்கே ஒரு 10ஆம் வகுப்பு மாணவி சர்வ சாதாரணமாக பங்குச்சந்தை முதலீட்டை மேற்கொள்கிறார். பெங்களூருவை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி சிஞ்சனா சந்தோஷ் தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டான ஒரு நபராக இருக்கிறார். இந்த சிறிய வயதிலேயே பங்குச்சந்தை முதலீட்டில் அசத்தி வருகிறார்.

பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த சிஞ்சனா சந்தோஷ், 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு சிறுவயதிலிருந்தே பணத்தின் மீதும் முதலீட்டின் மீது ஆர்வம் இருந்தது. தனது உண்டியலில் சில்லறை காசுகளை சேமிக்க தொடங்கிய அவர், தனது 12 வயதிற்குள் சுமார் 10,000 ரூபாய் வரை சேர்த்திருந்தார். இதனை அடுத்து பெற்றோரின் வழிகாட்டுதலோடு அடிப்படை நிதி பாடங்களை கற்றுக்கொண்ட சிஞ்சனா, வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் முதலீடுகள் குறித்து படித்தறிந்தாராம்.

15 வயதில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள போர்ட்போலியோ.. பங்குச்சந்தை முதலீட்டில் கலக்கும் பள்ளி மாணவி..!!

ஆன்லைன் கற்றலோடு நின்றுவிடாமல் செபி மற்றும் NISM (National Institute of Securities Markets) தொடர்பான தேர்வுகளை எழுதி சான்றிதழ்களை பெற்றுள்ளார். இதனை அடுத்து பங்குச்சந்தை முதலீடுகளை அவர் தொடங்கியுள்ளார். ஈக்விட்டிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் வெளிநாட்டு முதலீட்டு சந்தைகளிலும் பரவலாக பணத்தை முதலீடு செய்து 13.9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போர்ட்போலியோவுக்கு சொந்தக்காரராக மாறி இருக்கிறார். பெற்றோர் மேற்பார்வை இருந்தாலும் முதலீட்டு முடிவுகளை இவரே எடுக்கிறாராம்.

தனது உயர்கல்வி செலவுக்காக அடுத்த 7 வருடங்களை இலக்காக கொண்டு இந்த முதலீட்டை செய்து வருவதாக கூறுகிறார். மேலும் பட்ஜெட் போடுவது, முதலீடு, கடன் மற்றும் மோசடி விழிப்புணர்வு போன்ற நிதி விஷயங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் புதிய Financial Card Game ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 லட்சம் மாணவர்களுக்கு நிதி எழுத்தறிவை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே சிஞ்சனாவின் மிகப்பெரிய கனவு. கடினமான நிதி விஷயங்களை வகுப்பறை கல்வி போல் இல்லாமல், விளையாட்டுகள் மற்றும் எளிய செயல்முறை கற்றல் மூலம் குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்க விரும்புவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சமூகவலைதள வாசிகள் இந்த பள்ளி மாணவியின் முதலீட்டு திட்டங்களிஅ தான் விவாதித்து வருகின்றனர்.சிலர் பெற்றோரின் உதவி இல்லாமல் இது சாத்தியம் இல்லை என கூறுகின்றனர். ஒரு சாரார் அந்த சிறுமியை பாராட்டியும் வருகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

15-Year-Old Class 10 Student Builds ₹13.9 Lakh Investment Portfolio: How Sinchana Santosh Started Investing

15 வயதில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள போர்ட்போலியோ.. பங்குச்சந்தை முதலீட்டில் கலக்கும் பள்ளி மாணவி..!! /A 15-year-old Class 10 student from Bengaluru, Sinchana Santosh, has attracted online attention after reports revealed that she manages an investment portfolio worth ₹13.9 lakh under her parents’ supervision.

Story first published: Tuesday, September 22, 2026, 16:59 [IST]

Other articles published on Sep 22, 2026

Read More

Previous Post

"காயங்களுடனான போராட்டத்தில் தோற்றுவிட்டேன்" – கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்!

Next Post

பாரிசான் ஆர்வமுள்ள கட்சிகளுக்கு மூலோபாய கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பும் | Makkal Osai

Next Post
பாரிசான் ஆர்வமுள்ள கட்சிகளுக்கு மூலோபாய கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பும் | Makkal Osai

பாரிசான் ஆர்வமுள்ள கட்சிகளுக்கு மூலோபாய கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பும் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin