விதிகளின்படி, மாதாந்திர வருமானத் திட்டத்தில் (Monthly Income Scheme) தனிநபர் மற்றும் கூட்டுக்கணக்குகளைத் தொடங்கும் வசதி உள்ளது. தனிநபர் கணக்கைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம்; கூட்டுக்கணக்கைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம். தற்போது இத்திட்டம் 7.4 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்தத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதன்படி, ஒருவர் 5 ஆண்டுகளுக்கு 9 லட்சம் ரூபாயை இத்திட்டத்தில் டெபாசிட் செய்தால், அவருக்கு மாதந்தோறும் 5,500 ரூபாய் வட்டித் தொகையாகக் கிடைக்கும்.


