• Login
Tuesday, September 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானியாவில் இடம்பெற்ற தாயகமே தலைவணக்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு…

GenevaTimes by GenevaTimes
September 22, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
பிரித்தானியாவில் இடம்பெற்ற தாயகமே தலைவணக்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படும், போர்ச்சூழல் காரணமாக முன்னதாக மாவீரர்களாக அடையாளப்படுத்தப்படாத மேலும் 20 பேருக்கான வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இடம்பெற்றது.



அத்துடன், அவர்களுக்கான நடுகல் விதைப்பும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பகுதியில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தின் மாவீரர் நினைவாலயத்தில் நடைபெற்றது.


தமிழீழ மாவீரர் பணிமனையினால் உறுதி செய்யப்பட்ட 20 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வினை, மாவீரர் பணிமனை ஐக்கிய இராச்சியத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


மாவீரர்களின் திருவுருவப்படங்கள்



இதன்படி பண்ணிசை வாத்தியம் முழங்க மாவீரர்களின் திருவுருவப்படங்கள் மற்றும் அந்த மாவீரர்களுக்குரிய தேசியக் கொடிப் பேழைகள் உறவுகளால் மாவீரர் மண்டபத்தை நோக்கி மிகவும் உணர்வு பூர்வமாகத் தாங்கிவரப்பட்டது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற தாயகமே தலைவணக்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு... | Heroic Tribute Event For The Fallen Maveerar

மண்டபத்தின் முன்றலின் ஆரம்ப நிகழ்விடத்தில், பொதுச் சுடர்கள் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. கொடிப் பாடல் முடிவில், தமிழீழத் தாயகமே தலைவணங்கும் வீரவணக்க அடையாளமாக தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.


ஆரம்ப நிகழ்வினைத் தொடர்ந்து இருபது மாவீரர்கடைய திருவுருவப் படங்களும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரதான மேடையின் படத்தாங்கிகளில் வரிசையாக வைக்கப்பட்டது.


தொடர்ந்து பொது மாவீரருக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த வீரவணக்க நிகழ்வில்…

01 வீரவேங்கை மாவீரர் இன்பவதி, 02 கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் தமிழ்மாறன், 03 கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் யசோதா, 04 வீரவேங்கை மாவீரர் இன்பதூயோன், 05. வீரவேங்கை மாவீரர் நிலவரசன், 06. கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் அனுசியாதேவி, 07. வீரவேங்கை மாவீரர் தமிழேந்தி, 08. வீரவேங்கை மாவீரர் சுடரொளி, 09. வீரவேங்கை மாவீரர் செந்தளிர், 10. வீரவேங்கை மாவீரர் குயிலினி, 11. வீரவேங்கை மாவீரர் அறிவு, 12. வீரவேங்கை மாவீரர் புரட்சிகரன், 13. கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் வரதன், 14. கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் நிலா, 15. கடற்கரும்புலி வீரவேங்கை மாவீரர் நாதினி, 16. வீரவேங்கை மாவீரர் சின்னக்கண்ணன், 17. வீரவேங்கை மாவீரர் ஈழத்தென்றல், 18. வீரவேங்கை மாவீரர் மேகலா, 19. வீரவேங்கை மாவீரர் ஜெரி/பாண்டியன், 20. வீரவேங்கை மாவீரர் நரசிம்மன்

ஆகிய 20 மாவீரர்கள் அடையாளப் படுத்தப்பட்டிருந்தார்கள்.

[CQRX1NS
]

வீரம் செறிந்த போராட்ட வரலாறு



இவர்களின் ஆரம்பகால வாழ்க்கையையும், வீரம் செறிந்த போராட்ட வரலாற்றையும், தியாகத்தின் உச்சமாக அமைந்த வீரச்சாவின் இறுதிக்கணத்தையும் உறவுகளும், போராளிகளும் வாசித்தளிக்க, ஒவ்வொரு வரலாற்றுச்சுவடுகளின் முடிவிலும் குறிப்பிட்ட மாவீரரின் உரித்துடையோர்கள் ஈகைச் சுடரேற்றி, மலர் மாலை அணிவித்தனர்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற தாயகமே தலைவணக்கும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு... | Heroic Tribute Event For The Fallen Maveerar

இவ்வாறு 20 மாவீரர்களின் நிகழ்வினை தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட பல நூற்றுக்கணக்கான உறவுகள், சக போராளிகள் என அனைவரும் மலர் தூவி ஈகைச்சுடர் ஏற்றினர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

புதிய MyKad-ஐ அடையாளம் காணும் வகையில் சேவை வழங்குநர்கள் தங்களது கணினி அமைப்புகளைப் புதுப்பித்து வருவதாக JPN தெரிவித்துள்ளது – Malaysiakini

Next Post

ஈரானில் பெரும் தாக்குதல்.. ஹவுதி விவகாரத்தில் யூ-டர்ன்.. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு.. பதற்றத்தில் மக்கள்! | US Issues Immediate Departure Advisory for Citizens in Iran as Trump Hesitates on Yemen Houthi Airstrikes

Next Post
ஈரானில் பெரும் தாக்குதல்.. ஹவுதி விவகாரத்தில் யூ-டர்ன்.. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு.. பதற்றத்தில் மக்கள்! | US Issues Immediate Departure Advisory for Citizens in Iran as Trump Hesitates on Yemen Houthi Airstrikes

ஈரானில் பெரும் தாக்குதல்.. ஹவுதி விவகாரத்தில் யூ-டர்ன்.. அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு.. பதற்றத்தில் மக்கள்! | US Issues Immediate Departure Advisory for Citizens in Iran as Trump Hesitates on Yemen Houthi Airstrikes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin