தமிழீழ விடுதலைக்காக பசிமறந்து நல்லூர் வீதியில் உயிர்துறந்த தியாக தீபம் திலீபனின்
39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கிலும், புலம்பெயர்
நாடுகளிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றன.
தியாக தீபம் திலீபன் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 26 ஆம்
திகதி வரை, நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரம்கூட அருந்தாமல், அகிம்சை வழியில்
தனது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை
மேற்கொண்டிருந்தார்.
அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
ஏற்பாட்டில், பிரித்தானியா முழுவதும் “12 நாட்கள், 12 கருப்பொருள்கள், 12
இடங்கள்” என்ற அடிப்படையில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டமும் அரசியல்
விழிப்புணர்வு செயற்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆறாவது நாள் நிகழ்வு
இந்தச் செயற்திட்டத்தின் ஆறாவது நாள் நிகழ்வு திங்கட்கிழமை (20.09.2026)
லண்டனில் இடம்பெற்றது.

06வது நாள் கருப்பொருளாக, “இலங்கை அரசின் இனவழிப்பு திட்டமும் திவிரமடையும்
தமிழ் மக்களின் பாதுகாப்பு பிரச்சனையும்” என்ற தலைப்பு முன்னிறுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் 12 நாள் உண்ணாவிரதப் போராட்டம் வரை தொடரும்
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றையும் அதன் படிப்பினைகளையும் புதிய
தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதே இச்செயற்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில்
ஒன்றாகும்.
காலை 10 மணி முதல் பிற்பகல் வரை அடையாள உணவு
தவிர்ப்புப் போராட்டம் ஒன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தொடர்ந்து, தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு நாடுகடந்த தமிழ்
ஈழ அரசாங்கத்தின் உறுப்பினரான கோபாலன் பிரசாத் மலர்மாலை அணிவித்து,
உதயநிஷா ஈகை சுடர்ஏற்றிய பின்னர் கலந்து கொண்டவர்களால் மலர்தூவி
அஞ்சலி செலுத்தப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |


