• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

உயர் கல்வி கற்ற இலங்கை இளைஞர்களில் 43 சதவீதமானோர் வேலையின்றி தவிப்பு: IMF எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
உயர் கல்வி கற்ற இலங்கை இளைஞர்களில் 43 சதவீதமானோர் வேலையின்றி தவிப்பு: IMF எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
உயர் கல்வி கற்ற இலங்கை இளைஞர்களில் 43 சதவீதமானோர் வேலையின்றி தவிப்பு: IMF எச்சரிக்கை

இலங்கையில் உயர் கல்வி கற்ற இளைஞர்களில் 43 சதவீதமானோர் வேலையின்றி தவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளதுடன், பல்கலைக்கழக கல்விக்கும் தொழில் சந்தைக்கும் இடையிலான இடைவெளியே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் தொழில் சந்தையின் தேவைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு மத்தியில், ஆசியாவிலேயே உயர் கல்வி கற்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான தொழில் நெருக்கடி நிலவும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள சுமார் 1.2 பில்லியன் இளைஞர்கள் எதிர்வரும் 10 ஆண்டுகளில் தொழில் சந்தையில் நுழையவுள்ள நிலையில், தெற்காசியாவில் உயர் கல்வி கற்ற இளைஞர்களிடையேயான வேலையின்மை விகிதம் மிகத் தீவிரமடைந்துள்ளது. 

அந்த வகையில், இலங்கையில் உயர் கல்வி முடித்த பட்டதாரி இளைஞர்களிடையே நிலவும் வேலையின்மை விகிதம் சுமார் 43 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இது ஆசிய பிராந்தியத்தில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும். 

ஆயிரக்கணக்கான இலங்கை இளைஞர்கள் உயர் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த போதிலும், அவர்களின் கல்வித் தகைமைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற தொழில்களைப் பெற்றுக்கொள்வதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

பல்கலைக்கழகக் கல்விக்கும் தொழில் சந்தையின் உண்மையான தேவைகளுக்கும் இடையே நிலவும் பாரிய இடைவெளியே, நாட்டின் உயர் கல்வி கற்ற பிரிவினர் மத்தியில் வேலையின்மை அதிகரிக்க முக்கிய காரணம் என அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. 

தொழிற்றுறைகள் புதிய நவீன தொழில்நுட்பங்களை விரைவாக உள்வாங்கி வரும் நிலையில், வழக்கமான பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் ஊடாக கற்பிக்கப்படும் திறன்களுக்குப் பதிலாக, புதிய திறன் கட்டமைப்புகளையே நிறுவனங்கள் பட்டதாரிகளிடம் எதிர்பார்க்கின்றன.

இதற்கு மேலதிகமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி இந்த அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உற்பத்தித் திறனையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பணியாளர்களினதும் கல்வி கட்டமைப்புகளினதும் மாற்றத்தை விட தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக முன்னெடுக்கும் பட்சத்தில், புதிய பட்டதாரிகளுக்கான ஆரம்ப நிலை வேலைவாய்ப்புகளின் தேவை குறைய வாய்ப்புள்ளது.

பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை முன்னெடுத்து வரும் இலங்கை, இளைஞர்களுக்கான நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை உறுதிப்படுத்துவது தற்போதைய சூழலில் பெரும் சவாலாக உள்ளது. 

அதேவேளை, உற்பத்தித் திறன் வாய்ந்த தொழில்நுட்பங்கள் புதிய முதலீடுகளை ஈர்த்து புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவை என்பதால், எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களை முறையான திறன்களுடன் தயார்படுத்துவதிலேயே நாட்டின் முன்னேற்றம் தங்கியுள்ளது என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

Read More

Previous Post

மலையகத்தில்… | Tamilmirror Online

Next Post

சிறை வாழ்க்கை பணம் மற்றும் செல்வாக்கைப் பொறுத்தே அமைகிறது என்ற குற்றச்சாட்டை சிறைத்துறை மறுத்துள்ளது – Malaysiakini

Next Post

சிறை வாழ்க்கை பணம் மற்றும் செல்வாக்கைப் பொறுத்தே அமைகிறது என்ற குற்றச்சாட்டை சிறைத்துறை மறுத்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin