• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

UPI MDR கட்டணம்: ரூ.4000 பில்லை இரண்டாக பிரித்து பணம் செலுத்தினால் MDR உண்டா? மக்களே உஷார்..!! | UPI MDR from Oct 15: Can splitting a ₹4,000 bill into two ₹2,000 payments avoid the 0.4% charge? What NPCI rules say now

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
UPI MDR கட்டணம்: ரூ.4000 பில்லை இரண்டாக பிரித்து பணம் செலுத்தினால் MDR உண்டா? மக்களே உஷார்..!! | UPI MDR from Oct 15: Can splitting a ₹4,000 bill into two ₹2,000 payments avoid the 0.4% charge? What NPCI rules say now
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


UPI MDR கட்டணம்: ரூ.4000 பில்லை இரண்டாக பிரித்து பணம் செலுத்தினால் MDR உண்டா? மக்களே உஷார்..!!

இந்தியாவில் ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ செயலிகளான கூகுள் பே, பேடிஎம், பிம், போன்பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தான் மத்திய அரசு யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணங்களை அறிமுகம் செய்துள்ளது.

வரும் அக்டோபர் 15ஆம் தேதி 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட குறிப்பிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% எம்டிஆர் (MDR- merchant discount rate) கட்டணம் விதிக்கப்படவுள்ளது. இந்த கட்டணத்தை வாடிக்கையாளரோ அல்லது சாமானிய மக்களோ செலூத்த வேண்டாம். வணிக நிறுவனங்கள் யுபிஐ சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு செலுத்தினால் போதும். வணிக நிறுவனங்களுக்கு இது ஒரு நிதி சுமை தான். என்ன தான் அரசு பொதுமக்கள் மீது இதனை சுமத்த கூடாது என கூறினாலும் மறைமுக இந்த கட்டணங்களை நிறுவனங்கள் வாடிக்கையாளரான நம் மீது தான் சுமத்த போகின்றன என்பதே உண்மை.

UPI MDR கட்டணம்: ரூ.4000 பில்லை இரண்டாக பிரித்து பணம் செலுத்தினால் MDR உண்டா? மக்களே உஷார்..!!

இந்த எம்டிஆர் கட்டணங்களில் இருந்து விலக்கு பெற பெரிய தொகை பில்களை 2000 ரூபாய்க்குள் என சிறிய சிறிய பில்களாக பிரித்து கட்டணம் செலுத்தினால் அதற்கும் எம்டிஆர் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கு உதாரணத்துடன் கூடிய விளக்கத்தை நாம் பார்க்கலாம்.

உதாரணமாக, ஒரு வியாபாரிக்கு நீங்கள் ஒரே கட்டணமாக 4,000 செலுத்தினால், 0.4% கணக்கின்படி அவர் யுபிஐ சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் வங்கிக்கு என மொத்தம் 16 ரூபாய் எம்டிஆர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், அந்த ஒட்டுமொத்த பணத்தை ஒரே கட்டணமாக செலுத்துவதற்கு பதில் நீங்கள் 2000 ரூபாய் வீதம் 2 தனித் தனி பேமெண்டாக செலுத்தினால் என்ன ஆகும்?.

உண்மையில் இதில் வியாபாரிக்கு தான் சேமிப்பு. ஏனெனில் 2,000 ரூபாய் அல்லது அதற்கு குறைவான பரிவர்த்தனைகள் இலவச வரம்பிற்குள் வருவதால், இந்த முறையில் வியாபாரி அந்த 16 ரூபாய் கட்டணத்தை தவிர்க்க முடியும்.

தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய கட்டமைப்பில், ஒரே பில்லை தனித்தனியாக பிரித்து கட்டணம் செலுத்த கூடாதோ என்றோ, பல பரிவர்த்தனைகளை கட்டாயம் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றோ எந்த ஒரு விதியையும் குறிப்பிடவில்லை. அதாவது பரிவர்த்தனை அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. வாடிக்கையாளரும் வியாபாரியும் ஒப்புக்கொண்டு 2 முறை பணம் செலுத்தினால் அது இரு தரப்புக்கு உட்பட்டது.

மேலும், ஒரே வியாபாரிக்கு மீண்டும் மீண்டும் ஒரு நபர் செய்யும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவொரு தனி தினசரி வரம்பையும் NPCI இதுவரை அறிவிக்கவில்லை. எனவே நீங்கள் பொருட்களை வாங்கும் போதும் 2000 ரூபாய்கு மேல் பணம் செலுத்தும் போதும் வியாபாரிகள் அல்லது நிறுவனங்கள் அந்த பில்லை தனித்தனியாக பிரித்து செலுத்துங்கள் என கோரிக்கை விடுக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த நடைமுறையை ஒரு வியாபாரியோ அல்லது நிறுவனமோ தொடர்ந்து பின்பற்றினால் வருங்காலத்தில் சிக்கலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. எம்டிஆர் கட்டணத்தை தவிர்ப்பதற்கான இதுபோன்ற வழிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டால் வங்கியோ அல்லது யுபிஐ செயலியோ NPCI இடம் புகார் தரலாம்.

இந்தியாவில் 2000 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட யுபிஐ பரிவர்த்தனை அளவு மொத்த பரிவர்த்தனையில் சொற்ப பங்கையே கொண்டுள்ளது என NPCI கூறுகிறது. இருந்தாலும் பொதுமக்களாகிய நாம் 2000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தும் போது வியாபாரிகளால் பில்லை தனி தனியாக கட்டும் படி கோரப்பட நேரிடலாம், சில வியாபாரிகள் வணிகம் சார்ந்த கியூ ஆர் கோடுகள் இல்லாமல் தனிப்பட்ட மொபைல் எண்ணை ஸ்கேன் செய்து எம்டிஆர் கட்டணத்தை தவிர்க்க முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களாகிய நமக்கு பிரச்சினை இல்லை ஆனால் வியாபாரம் செய்பவர்கள் இதில் சிக்கினால் சிக்கலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

யுபிஐ கியூஆர் மூலம் 1 லட்சம் வரை பெறும் வணிகர்களுக்கு எம்டிஆர் கட்டணம் இல்லை என்ற வரம்பு இருப்பதால் சிலர் இது போன்ற மாற்ற பாதைகளை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இது வெளிப்படை தன்மையை குறைக்கும் என ஒரு சாரார் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் எம்டிஅர் கட்டணம் நடைமுறைக்கு வரும் போது தான் உண்மையான சிக்கல்கள் என்னென்ன என்பது தெரிய வரும்.

Share This Article

English summary

UPI MDR from Oct 15: Can splitting a ₹4,000 bill into two ₹2,000 payments avoid the 0.4% charge? What NPCI rules say now

UPI MDR கட்டணம்: ரூ.4000 பில்லை இரண்டாக பிரித்து பணம் செலுத்தினால் MDR உண்டா? மக்களே உஷார்..!!/ From October 15, 2026, India will levy a 0.4% UPI MDR on person-to-merchant payments above ₹2,000 (capped at ₹300), payable by merchants—not customers. Splitting a large bill into multiple sub-₹2,000 transactions can currently avoid MDR since NPCI has not set a daily cap per merchant.

Story first published: Monday, September 21, 2026, 16:13 [IST]

Other articles published on Sep 21, 2026

Read More

Previous Post

விஜயதசமி நாளில் அதிரடி மாற்றம்.. இந்தியப் பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளித்தது நியூசிலாந்து! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ரஷ்யாவுக்கு வடகொரிய பெண்கள்: போரால் வலுவான கூட்டணி|Men to Battlefield, Women to Factories: North Korea Helps Russia

Next Post
ரஷ்யாவுக்கு வடகொரிய பெண்கள்: போரால் வலுவான கூட்டணி|Men to Battlefield, Women to Factories: North Korea Helps Russia

ரஷ்யாவுக்கு வடகொரிய பெண்கள்: போரால் வலுவான கூட்டணி|Men to Battlefield, Women to Factories: North Korea Helps Russia

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin