Last Updated:
இதற்கு பதிலடியாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரியாக டிரோன்களை வீசித் தாக்கியது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான சண்டை மீண்டும் உக்கிரமடைந்துள்ளது.
உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கொழுந்துவிட்டு எரிந்தது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் குறி வைத்து உக்ரைன் ஒரே இரவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீப்பற்றி வானுயரத்துக்குப் புகை மண்டலம் சூழ்ந்தது. மேலும், அருகே இருந்த குடியிருப்புப் பகுதிகளும் டிரோன் தாக்குதலில் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.
இதற்கு பதிலடியாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரியாக டிரோன்களை வீசித் தாக்கியது. இதில், அங்குள்ள சேமிப்பு கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.


