மறுபுறம், போர், பொருளாதாரத் தடைகள், வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் பிற புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல்களில் தங்கம் ஒரு ‘பாதுகாப்பான முதலீட்டுத் தளமாக’ (safe haven) கருதப்படுகிறது. எனவே, இத்தகைய சூழல்களில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடுவதுடன், அது அதன் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஜேபி மோர்கன் (JP Morgan) நிபுணர்களின் கருத்துப்படி, மத்திய வங்கிகளின் பெருமளவிலான தங்கக் கொள்முதல், அமெரிக்க வேலைவாய்ப்புச் சந்தை குறித்த பலவீனமான தரவுகள் மற்றும் நாணயம் தொடர்பான கவலைகள் அதிகரித்தது ஆகியவை தங்கத்தின் விலையை ஒரு அவுன்ஸிற்கு $4,400-க்கு மேல் உயர உதவியுள்ளன.


