2027-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தொடங்கும் போது ரோஹித் சர்மாவுக்கு 40 வயதும், விராட் கோலிக்கு 39 வயதும் அடையும். இதனால் அவர்கள் இத்தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக SportsNext தளத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய சந்தீப் பாட்டீல், “ரோஹித் மற்றும் விராட் கோலி அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய அணிக்கு பெரிய பாதிப்போ அல்லது பிரச்சனைகளோ வராது” என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் திறமைமிக்க மாற்று வீரர்களின் பலம் (Bench Strength) மிகவும் வலுவாக உள்ளது. தற்போதைய இளம் வீரர்கள் அணியை வழிநடத்தும் திறன் கொண்டவர்களாக உருவாகியுள்ளனர்.
இவ்விரு வீரர்களும் உலகக் கோப்பையில் விளையாடுவது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், உடல்தகுதி (Fitness) மற்றும் தேர்வுக்குழுவின் தொலைநோக்கு வியூகம் ஆகியவற்றைச் சார்ந்தே அமையும்.
ரோஹித் சர்மா ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் ஒரு சிறந்த பேட்டர் என்றும், விராட் கோலியின் சாதனைகளைப் பற்றி எவ்வளவு பேசினாலும் தகும் என்றும் கூறிய பாட்டீல், இருவரையும் கிரிக்கெட் உலகின் “லெஜெண்டுகள்” எனக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
இதனிடையே, விரைவில் தொடங்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விபரம்- சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், ஆகிப் நபி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நமன் திர்.

