• Login
Monday, September 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருமணம் – தனியார் நிகழ்வுகளில் பாடல்களை ஒலிபரப்ப புதிய உரிமம்! ரூ.1.25 லட்சம் வரை கட்டணம்

GenevaTimes by GenevaTimes
September 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருமணம் – தனியார் நிகழ்வுகளில் பாடல்களை ஒலிபரப்ப புதிய உரிமம்! ரூ.1.25 லட்சம் வரை கட்டணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் திருமணங்கள், விருந்துகள் மற்றும் பல்வேறு தனியார் அல்லது வர்த்தக நிகழ்வுகளில் இசையை ஒலிபரப்புவதற்கு புதிய உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை தேசிய அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தின் கீழ் இயங்கும் இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின் அடிப்படையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, சிங்களம், தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை நிகழ்வுகளில் ஒலிபரப்புவதற்கு குறிப்பிட்ட உரிமக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.

புதிய விதிமுறை

புதிய விதிமுறைகளின் கீழ் திருமண வரவேற்புகள், தனியார் விருந்துகள், நிறுவன நிகழ்வுகள், இரவு விருந்துகள், விருது வழங்கும் விழாக்கள், தயாரிப்பு அறிமுக நிகழ்வுகள், கண்காட்சிகள், மாநாடுகள், நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் DJ நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இசை இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

திருமணம் - தனியார் நிகழ்வுகளில் பாடல்களை ஒலிபரப்ப புதிய உரிமம்! ரூ.1.25 லட்சம் வரை கட்டணம் | Weddings And Events New License For Playing Music



எனினும், ஆங்கிலம் அல்லது பிற வெளிநாட்டு இசை மட்டுமே பயன்படுத்தப்படும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு நடைபெறுவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர், ஹோட்டல் அல்லது சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வு முடிந்த பின்னர், அங்கு ஒலிபரப்பப்பட்ட இசைப் படைப்புகளை அடையாளம் காண்பதற்கு போதுமான தரத்தில் ஒலிப்பதிவு ஒன்றையும் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் நிகழ்வின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உரிமக் கட்டணம் மாறுபடுகிறது.


பொதுவான DJ நிகழ்வுகளுக்கு:

100 பேருக்கும் குறைவானோர் – ரூ.20,000,  100 முதல் 300 பேர் வரை –  ரூ.30,000,   300 பேருக்கும் அதிகமானோர் – ரூ.40,000,  நேரடி இசை நிகழ்வுகளுக்கு முறையே ரூ.25,000, ரூ.35,000 மற்றும் ரூ.50,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டண அறவீடு



தனியார் அல்லது நிறுவன DJ நிகழ்வுகளுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையும், நேரடி அல்லது கலப்பு இசை நிகழ்வுகளுக்கு நிகழ்வின் அளவைப் பொறுத்து ரூ.50,000 முதல் ரூ.1,25,000 வரையும் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் - தனியார் நிகழ்வுகளில் பாடல்களை ஒலிபரப்ப புதிய உரிமம்! ரூ.1.25 லட்சம் வரை கட்டணம் | Weddings And Events New License For Playing Music

நிகழ்வுகளுக்கு மட்டுமன்றி, பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை நிலையங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வர்த்தக காட்சியகங்கள், வணிக வளாகங்கள், அலுவலகக் கட்டடங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட வர்த்தக வளாகங்களுக்கு வருடாந்த உரிமம் வழங்கப்படவுள்ளது.

குறித்த வளாகத்தின் பரப்பளவு மற்றும் அது அமைந்துள்ள உள்ளூராட்சி அதிகார சபை, ஆகியவற்றின் அடிப்படையில் வருடாந்த கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய நடைமுறை அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ACPOSL தலைவர் நிலார் என். காசிம் தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய உரிம விதிமுறைகளுக்கு ஹோட்டல் துறையிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இலங்கை ஹோட்டல் சங்கத்தின் (THASL) தலைவர் அசோக ஹெட்டிகொட, இந்த நடைமுறை ஹோட்டல் துறைக்கு அதிகப்படியான மற்றும் நியாயமற்ற நிதிச்சுமையை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.


இந்த கூடுதல் செலவு காரணமாக ஹோட்டல்களில் சிங்கள இசையை ஒலிபரப்புவதைத் தவிர்க்கும் நிலை உருவாகக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

நஜிப்பிற்கு உதவ முன்வரும் வெளிநாட்டு நண்பர்கள்: நெகிழ்ச்சியில் உறைந்த ரோஸ்மா மன்சூர்! | Makkal Osai

Next Post

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டம் | TVK Government Won’t Allow Navodaya Schools in Tamil Nadu, Says Minister CTR Nirmal Kumar

Next Post
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது” – அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டம் | TVK Government Won’t Allow Navodaya Schools in Tamil Nadu, Says Minister CTR Nirmal Kumar

“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தவெக அரசு அனுமதிக்காது” - அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டம் | TVK Government Won’t Allow Navodaya Schools in Tamil Nadu, Says Minister CTR Nirmal Kumar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin