• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2 தடவை ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? இரண்டுக்கும் வரி விலக்கு கிடைக்குமா? எக்ஸ்பர்ட் சொல்வது இதுதான்! | Can Two Home Loans get Double Tax Benefits? Know What the Income Tax Rules Say

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
2 தடவை ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? இரண்டுக்கும் வரி விலக்கு கிடைக்குமா? எக்ஸ்பர்ட் சொல்வது இதுதான்! | Can Two Home Loans get Double Tax Benefits? Know What the Income Tax Rules Say
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2 தடவை ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? இரண்டுக்கும் வரி விலக்கு கிடைக்குமா? எக்ஸ்பர்ட் சொல்வது இதுதான்!

இன்றைய விலைவாசி உயர்வில் கையில் பணத்தை வைத்துக்கொண்டு சொந்த வீடு கட்ட ஆரம்பித்தாலும் பணம் பாதியில் காலியாகி விடுகிறது. இப்படி கஷ்டப்படும் பலருக்கு வங்கிகள் வழங்கும் ஹோம் லோன் பெரிதும் உதவி வருகிறது. அப்படி சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹோம் லோன்களைப் பெற்றிருப்பீர்கள். இரண்டு லோன் பெற்றிருந்தாலும் இரண்டுக்கும் வரிச் சலுகைகள் கிடைக்குமா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை பார்ப்போம்.

ஆஸ்க் வாலெட் வைப் என்பது தனிநபரின் பணம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு மெயில் மூலம் உங்களுடைய சந்தேகங்களை எழுதி அனுப்பலாம். அதற்கு நிபுணர்கள் பதிலளிப்பார்கள். அப்படி கேட்கப்பட்ட கேள்விதான் இது. இரண்டு லோன் பெற்றிருந்தால் இரண்டுக்கும் வரி சலுகைகள் கிடைக்குமா?

2 தடவை ஹோம் லோன் வாங்கி இருக்கீங்களா? இரண்டுக்கும் வரி விலக்கு கிடைக்குமா? எக்ஸ்பர்ட் சொல்வது இதுதான்!

எக்ஸ்பர்ட் சொன்ன பதில்: இந்தியாவில் பிறந்த ஒருவர் சட்டதிட்டங்களின்படி எத்தனை ஹோம் லோன் வேண்டுமானாலும் வாங்கலாம். அதை வைத்து எத்தனை வீடு வேண்டுமானாலும் சொந்தமாக வைத்திருக்கலாம். ஆனால் அதற்கு கிடைக்கும் வரிச் சலுகைகள் அரசாங்க விதிகளுக்கு உட்பட்டே கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் சொந்தமாக குடியிருக்க வீடு வாங்கினாலும் வரிச் சலுகைகளுக்கு வரம்பு இருக்கிறது. அதேபோல நீங்கள் வாடகை வீடு கட்டி இருக்கிறீர்கள் என்றாலும் அதற்கும் வரி விலக்கு கிடைக்கும். இதற்கும் அரசு சில விதிகளை நிர்ணயித்திருக்கிறது.

பழைய வரிமுறையின் கீழ் நீங்கள் சுயமாக பயன்படுத்த வீடு கட்டி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வைத்திருக்கும் எல்லா கடன்களுக்கும் வட்டியில் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். அதுவே நீங்கள் ஹோம் லோன் பெற்று வாடகைக்கு வீடு கட்டி விட்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு ரூ.2 லட்சம் என்ற வரம்பு இல்லை. முழு வட்டியையும் கழித்துக் கொண்டு வரி செலுத்தலாம்.

உங்களுக்கு 1 வருடத்தில் நீங்கள் வங்கிக்கு செலுத்தும் வட்டியால் நஷ்டம் ஏற்படுகிறது. அதைவிட உங்களுடைய வாடகை வருமானம் குறைவாக இருக்கிறது என்றால்.. நீங்கள் உங்கள் மற்ற வருமானத்துடன் சேர்த்து ரூ.2 லட்சம் வரை விலக்கு பெற முடியும்.

உதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ரூ.1 லட்சம் வாடகை கிடைக்கிறது. ஆனால் அந்த ஆண்டில் நீங்கள் வங்கிக்கு செலுத்தும் வட்டி ரூ.4 லட்சம் வரை செல்கிறது என்றால் அந்த நேரத்தில் உங்களுக்கு ரூ.3 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும். எனவே அந்த ஆண்டு உங்கள் சம்பள வருமானத்தில் ரூ.2 லட்சத்தை மைனஸ் செய்து கொள்ளலாம். மீதம் இருக்கும் ரூ.1 லட்சத்தை அப்படியே அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் சென்று மைனஸ் செய்யலாம்.

அடுத்து வரும் 8 ஆண்டுகளுக்கு இதை செய்யலாம். உங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை கணக்கில் காட்ட அரசு வழங்கும் கால அவகாசமே இந்த 8 ஆண்டுகள். ஆனால் அதன் பிறகு உங்களால் அந்த நஷ்டத்தை கணக்கு காட்ட முடியாது.

ஆனால் புதிய வரிமுறையின் கீழ் அசல் தொகைக்கும் எந்த வரிச் சலுகையும் கிடையாது. அதேபோல சுயமாக வீடு கட்டி குடியிருக்கும் நபர்கள் பெற்ற கடனுக்கு.. அவர்கள் செலுத்திக்கொண்டிருக்கும் வட்டிக்கும் வரிவிலக்கு கிடையாது. வாடகைக்கு விடப்பட்ட சொத்தாக இருந்தால் வாடகை வருமானத்தைப் பொறுத்து சில சலுகைகள் கிடைக்கும்.

Share This Article

Story first published: Sunday, September 20, 2026, 12:30 [IST]

Other articles published on Sep 20, 2026

Read More

Previous Post

72-வது தேசிய திரைப்பட விருதுகள்: 70 ஆண்டுகளைக் கடந்த விருதின் வரலாறும் சிறப்பும் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin