நிலவிவரும் தீவிர மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, வீதிகள், தாழ்நிலங்கள் மற்றும் பாடசாலை மைதானங்கள் மழைநீரால் மூழ்கியுள்ள நிலையினைக் கருத்திற்கொண்டு, நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளைப் பராமரித்து நடத்துவதற்கான முழு அதிகாரமும் அந்தந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.எஸ். திசாநாயக்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வீதிகள் மூழ்கும் அபாயம், மண்மேடுகள் சரிந்துவிழும் ஆபத்துகள் உள்ளிட்ட இயற்கை ஆபத்துகள் குறித்துக் கவனத்திற்கொண்டு, பாடசாலைகளைத் தொடர்ந்து நடத்த முடியுமா அல்லது முடியாதா என்பது குறித்து அதிபர்கள் தாங்களாகவே தீர்மானம் மேற்கொண்டு, அது தொடர்பான விவரங்களை வலயக் கல்வி அலுவலகங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.


