• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



2017ஆம் ஆண்டு பொலிவியாவில் பணியாற்றி வந்த உயிரியல் நிபுணரும் National Geographic Explorer-ஆகவும் இருந்த பவுலா நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் என்பவருக்கு, உள்ளூர் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வித்தியாசமான பூனை ஒன்று குறித்து தகவல் கிடைத்துள்ளது.


காட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள சாலையோரத்தில் பூனைக்குட்டியாக இருந்தபோது உள்ளூர் நபர் ஒருவர் அதனை மீட்டெடுத்து, வீட்டுப் பூனை என நினைத்து வளர்த்து வந்துள்ளார்.

வித்தியாசமான தோற்றம்

சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், அது காட்டுப் பூனை என்பதை உணர்ந்த அவர், அந்த விலங்கை வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைத்துள்ளார்.

வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம் | A New Cat Species Discovered After 100 Years


இந்த விலங்கை பார்வையிட்ட நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ், அதன் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருப்பதை கவனித்துள்ளார்.

சிறிய சுருங்கிய முகம், குட்டையான வட்டமான காதுகள், நீண்ட மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற உடல் புள்ளிகள் ஆகியவை அந்தப் பூனையின் முக்கிய தனிச்சிறப்புகளாக இருந்துள்ளன.



“அந்தப் பூனையை சுமார் 100 புகைப்படங்கள் எடுத்தேன். நான் மிகவும் வியப்படைந்திருந்தேன்” என நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் தெரிவித்துள்ளார்.


முதலில் இந்தப் பூனை ஏற்கனவே அறியப்பட்ட Leopardus tigrinus இனத்தைச் சேர்ந்ததாகவே விஞ்ஞானிகள் கருதியுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வு

இந்த இனத்திற்கு Tigrina, Oncilla, Tigrillo மற்றும் Little Spotted Cat உள்ளிட்ட பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம் | A New Cat Species Discovered After 100 Years


எனினும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விலங்கு ஏற்கனவே அறியப்பட்ட இனத்தைச் சேர்ந்தது அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம், 100 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு பூனை குடும்பத்தில் புதிய இனமாக அறிவிக்கப்படும் முக்கியமான கண்டுபிடிப்பாக இது அமைந்துள்ளது.


இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வு Current Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.



அறிவியலுக்கு முற்றிலும் புதிய ஒரு பூனை இனம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலக வனவிலங்கு ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

‘உள்ளூர் பொருட்களை வாங்குதல்’ கொள்கை இப்போது தேசிய முன்னுரிமையாகும் – அர்மிசான் – Malaysiakini

Next Post

ஆட்டிசத்திற்கு ஸ்டெம் செல் சிகிச்சை.. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஆட்டிசத்திற்கு ஸ்டெம் செல் சிகிச்சை.. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

ஆட்டிசத்திற்கு ஸ்டெம் செல் சிகிச்சை.. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin