Last Updated:
கிராமப்புறங்களில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறை மற்றும் சீரற்ற இணைய இணைப்பு காரணமாக 24 மணி நேரமும் தொடர்ச்சியாக சிசிடிவி பதிவுகளைப் பராமரிப்பது கடினம்.
இந்தியாவில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் (Pharmacies) கட்டாயமாக சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்ற மத்திய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆலோசனைக் குழுவின் (DTAB) பரிந்துரைக்கு, நாடு முழுவதிலும் உள்ள மருந்தக உரிமையாளர்கள் மற்றும் கெமிஸ்ட் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை, போதை தரும் இருமல் மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, விற்பனை நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பை கட்டாயமாக்கவும், சப்ளையிடில போதைப்பொருட்களைக் கண்காணிக்கவும் ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற DTAB கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.
இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ‘அகில இந்திய கெமிஸ்ட் மற்றும் டிரக்கிஸ்ட் அமைப்பு’ (AIOCD) கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது-
முதல் 8 கேமராக்கள், ரெக்கார்டிங் சாதனங்கள் மற்றும் இணைய இணைப்பைப் அமைக்க சுமார் ரூ. 50,000 முதல் ரூ. 1,00,000 வரை செலவாகும். சிறிய மருந்தகங்களுக்கு இது பெரும் பொருளாதார சுமையாகும்.
கிராமப்புறங்களில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறை மற்றும் சீரற்ற இணைய இணைப்பு காரணமாக 24 மணி நேரமும் தொடர்ச்சியாக சிசிடிவி பதிவுகளைப் பராமரிப்பது கடினம்.
சிசிடிவி கேமராக்களால் மருந்துச் சீட்டுகளையோ அல்லது வழங்கப்படும் மருந்துகளையோ சரிபார்க்க முடியாது. அதற்குப் பதிலாக, தயாரிப்பு நிலையிலேயே ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ (Track & Trace) முறையை அமல்படுத்துவதே சரியான தீர்வாகும் என தெரிவித்துள்ளனர்.
பெரிய கார்ப்பரேட் மருந்தக சங்கிலிகள் இச்செலவை எளிதில் சமாளிக்கும் என்றாலும், கிராமப்புறங்களில் இயங்கும் சிறிய மருந்தகங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது முழு நிதி மானியம் வழங்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


