• Login
Saturday, September 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காங்கிரஸிடம் சரணடைந்தார் மம்தா.. நந்திகிராம் இடைத்தேர்தல் வேட்பாளர் திடீர் வாபஸ்! பெரிய ட்விஸ்ட் | Mamata Banerjee led faction bacs congress in Nadigram by election after her candidates withdraws nomination

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
காங்கிரஸிடம் சரணடைந்தார் மம்தா.. நந்திகிராம் இடைத்தேர்தல் வேட்பாளர் திடீர் வாபஸ்! பெரிய ட்விஸ்ட் | Mamata Banerjee led faction bacs congress in Nadigram by election after her candidates withdraws nomination
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Nantha Kumar R

Time
Updated: Friday, September 18, 2026, 17:23 [IST]

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணியினர் காங்கிரஸ் கட்சியிடம் சரணடைந்துள்ளனர். நந்திகிராம் சட்டசபை தொகுதியில் மம்தா பானர்ஜி சொந்தமாக வேட்பாளரை நிறுத்திய நிலையில் இன்று அவர் வாபஸ் வாங்கினார். இன்று காலையில் பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்தித்த பிறகு அந்த வேட்பாளர் தனது மனுவை வாபஸ் வாங்கி மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் வைத்துள்ளார். இதனால் மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் காங்கிரஸ்க்கு ஆதரவளிப்பதாகவும், ‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய சட்டபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தோல்வியடைந்தன. மம்தா பானர்ஜி ஆட்சியை பறிகொடுத்தார். இதையடுத்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

Mamata Banerjee

மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு தரப்பினும், அரூப் ராய் தலைமையில் இன்னொரு தரப்பினரும் (ரிதப்ரதா பானர்ஜி) தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன்பிறகு அக்டோபர் 9 ம் தேதி ரிசல்ட் வெளியாக உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்.. நிலைமை மம்தா கைமீறி போகுதே! தேர்தல் ஆணையம் உத்தரவு

திரிணாமுல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்.. நிலைமை மம்தா கைமீறி போகுதே! தேர்தல் ஆணையம் உத்தரவு

இதில் 2 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி மற்றும் அரூப் ராய் தரப்பினர் வேட்பாளர்களை அறிவித்தனர். இருஅணிகளும் உரிமை கோரியதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் புல்லுடன் கூடிய இரட்டை மலர் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இருதரப்புக்கும் வேறு பெயர், சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜி அணி ‘மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் கால்பந்து வீரர் சின்னத்திலும், அரூப் ராய் என்பவர் தலைமையிலான அணி வேட்பாளர் ‘டெமாக்கிரட்டிக் திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் ‘கடிதம்’ (Envelope) சின்னத்திலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் மம்தா பானர்ஜி அணி சார்பில் போட்டியிடும் சன்சிதா பிரதான் தே இன்று திடீரென்று தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். இன்று காலையில் சன்சிதா, பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அதன்பிறகு தான் அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் சன்சிதாவின் வாபஸ்க்கு பின்னால் முதல்வர் சுவேந்து அதிகாரி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மம்தா பானர்ஜியை நம்ப வைத்து சன்சிதா ஏமாற்றி உள்ளார்.

சன்சிதா ஆசிரியராக உள்ளார். இவரது கணவர் சத்யஜித் மம்தா பானர்ஜியின் நெருங்கிய ஆதரவாளர். இதனால் சன்சிதாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் வாபஸ் வாங்கியுள்ளார். இதனால் மம்தா பானர்ஜி அணி போட்டியில் இருந்து விலகி மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது.. மம்தா பானர்ஜி கட்சிக்கு புதிய பெயர் - சின்னம் ஒதுக்கீடு

இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது.. மம்தா பானர்ஜி கட்சிக்கு புதிய பெயர் – சின்னம் ஒதுக்கீடு

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ”நந்திகிராம் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தலில் நாங்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கஉள்ளோம். ‘இந்தியா’ கூட்டணியை பலமாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதன்மூலம் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியிடம் சரணடைந்துள்ளார். ஏனென்றால் மம்தா பானர்ஜியின் திரிணாமல் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தனித்து தான் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது கட்சி இரண்டாக பிளவுப்பட்ட நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளரும் தன்னை ஏமாற்றியதால் வேறு வழியின்றி மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மம்தா பானர்ஜியின் இந்த முடிவின் பின்னணியில் பாஜக மீதான பயம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த தொகுதி என்பது பாஜகவின் கோட்டையாக உள்ளது. கடந்த 2016, 2021, 2026 என்று மூன்று முறை சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்திய (2026 சட்டசபை தேர்தல்) தேர்தலில் சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பபானிபூர் தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்றார்.

இதில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை அவர் தோற்கடித்தார். இதனால் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக சுவேந்து அதிகாரி இருந்து கொண்டு நந்திகிராம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தான் இந்த நந்திகிராம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இப்போது சுவேந்து அதிகாரி தான் மேற்கு வங்க பாஜக அரசின் முதல்வராக உள்ளார். இதனால் இந்த தேர்தலில் பாஜகவை வெல்ல வைக்க வேண்டும் என்பதில் சுவேந்து அதிகாரி உறுதியாக இருக்கிறார். இதனால் மம்தா பானர்ஜி தரப்பு வேட்பாளரையும் சந்தித்து பேசி வாபஸ் வாங்க வைத்துள்ளார். இதனால் மம்தா பானர்ஜி தரப்பு பயந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரி 1,27,301 ஓட்டுகள் வாங்கினார். திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பபித்ரா கார் 1,17,636 வாக்குகள் வாங்கினார். கடந்த முறை காங்கிரஸ் கட்சியில் சேக் ஜரியாதுல் உசைன் என்பவர் போட்டியிட்டு வெறும் 794 ஓட்டுகள் டம்டுமே பெற்றார். இது நோட்டாவை விட குறைவாகும். நோட்டா சார்பில் 919 ஓட்டுகள் பெற்றது. இப்படி நோட்டாவை விட குறைவாக காங்கிரஸ் கட்சி இங்கு ஓட்டு வாங்கியிருக்கும் நிலையில் மம்தா பானர்ஜி வேறு வழியின்றி தற்போது ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

English summary

In West Bengal, the Mamata Banerjee-led camp has yielded to the Congress party. Mamata Banerjee withdrew the candidate she had fielded for the Nandigram Assembly constituency today. Following this, she announced her support for the Congress in that constituency and stated her intention to strengthen the ‘INDIA’ alliance.

Read More

Previous Post

போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ வைரல்: 11 வயது சிறுவன் பொலிஸ் காவலில்! – Sri Lanka Tamil News

Next Post

CNN உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை: டிரம்ப் திடீர் அறிவிப்பால் சர்ச்சை – Sri Lanka Tamil News

Next Post
CNN உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை: டிரம்ப் திடீர் அறிவிப்பால் சர்ச்சை – Sri Lanka Tamil News

CNN உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை: டிரம்ப் திடீர் அறிவிப்பால் சர்ச்சை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin