இதுவும் குஜராத்துக்கு தானா.. அலேக்கா தூக்கிக்கொண்டு போன டாடா.. 800 கோடி ரூபாய் மெகா முதலீட்டு திட்டம்!
இந்தியாவில் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது செமிகண்டக்டர் துறையில் இருந்து தான் வரும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இத்துறை சார்ந்த பெரும்பாலான சிப் உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் வட இந்திய மாநிலங்களே தொடர்ந்து தேர்வு செய்து வரும் நிலையில், மீண்டும் ஒரு மெகா திட்டம் குஜராத்துக்குச் சென்றுள்ளது.
இந்தியாவில் சிப் தயாரிப்பில் பெரும் முதலீடுகளைச் செய்ய துவங்கியுள்ள டாடா குழுமம் தற்போது சிப் தயாரிப்புக்கான சப்ளையர் நிறுவனங்களைக் குஜராத்துக்கு ஈர்த்து வருகிறது.

செமிகண்டக்டர் உற்பத்திக்கான உள்நாட்டு மூலப்பொருள் விநியோகச் பிரிவை உருவாக்குவதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் Fujifilm கார்ப்ரேஷன் இணைந்து ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
குஜராத்தின் தோலேராவில் ஏற்கனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் செமிகண்டகடர் சிப் உற்பத்தி ஆலையை அமைத்து வரும் வேளையில், இந்த தொழிற்சாலையைச் சுற்றி, செமிகண்டக்டர் உற்பத்திக்குத் தேவையான பொருட்களுக்கு முழுமையான மொத்த எகோசிஸ்டத்தை உருவாக்கும் இலக்குடன் டாடா எலக்ட்ரானிக்ஸ் Fujifilm உடனான கூட்டணியில் சேர்ந்துள்ளது.
தோலேரா பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் முதல் கட்டமாக 300mm செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் ஆலையை அமைத்து வருகிறது. இதன் உற்பத்திக்குத் தேவையான பொருட்களை Fujifilm தனது தொழில்நுட்ப அனுபவத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செமிகண்டக்டர் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதை அதிகரிப்பதற்காகவே இவ்இரு நிறுவனங்களும் கூட்டணியை உருவாக்கியுள்ளது. மேலும் Fujifilm நிறுவனம் முதல்கட்டமாக 800 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் குஜராத்தின் தோலேராவில் அமைத்து வரும் செமிகண்டக்டர் ஃபேரிகேஷன் ஆலைக்காக மொத்தம் ரூ.91,000 கோடி முதலீடு செய்து வருகிறது.
டாடா நிறுவனம் இந்த ஆலையில் 28nm முதல் 110nm வரையிலான சிப்கள் தயாரிக்கப்பட உள்ளன, இதன் உற்பத்திக்காக Fujifilm நிறுவனம் பல்வேறு உற்பத்தி பொருட்கள், உதாரணமாக கெமிக்கல் முதல் Insulating Materials வரையில் பலவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து வழங்குகிறது.
டாடா குழுமம் உருவாக்கியுள்ள கூட்டணி மூலம் இந்தியாவில் சிப் தயாரிப்பு மட்டுமின்றி, அதற்குத் தேவையான முக்கிய ரசாயனங்கள் மற்றும் மூலப்பொருட்களையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறன் விரிவடையும் வாய்ப்புகள் தற்போது உருவாகியுள்ளது. இந்த எகோசிஸ்டம் பிற்காலத்தில் அதிகளவில் சிப் தயாரிக்கும் போது குறைந்த விலையில் தயாரிக்கப் பெரிதும் உதவும்.
