• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“முதலில் சிவசேனா.. பிறகு NCP.. தற்போது திரிணாமுல் காங்.,” – பாஜகவை கடுமையாக சாடிய ராகுல்காந்தி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“முதலில் சிவசேனா.. பிறகு NCP.. தற்போது திரிணாமுல் காங்.,” – பாஜகவை கடுமையாக சாடிய ராகுல்காந்தி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Sep 18, 2026 6:51 PM IST

முதலில் சிவசேனா… பிறகு தேசியவாத காங்கிரஸ்… தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எனக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, வாக்கு திருட்டு, அரசைக் கைப்பற்றுதல், கட்சிகளை அபகரித்தல் என இவை அனைத்தும் ஜனநாயக சீரழிவு எனச் சாடியுள்ளார்.

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை முடக்கியது ஜனநாயக சீரழிவு என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார்..!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையில் ஒரு அணியும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் ஒரு அணியும் செயல்படும் நிலையில், அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

இதனை கடுமையாகக் கண்டித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஒரு கட்சியை பிளவுபடுத்த பாஜகவும், தேர்தல் ஆணையமும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலில் சிவசேனா… பிறகு தேசியவாத காங்கிரஸ்… தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எனக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, வாக்கு திருட்டு, அரசைக் கைப்பற்றுதல், கட்சிகளை அபகரித்தல் என இவை அனைத்தும் ஜனநாயக சீரழிவு எனச் சாடியுள்ளார்.

மக்கள் தீர்ப்பை பாதுகாக்க வேண்டிய தேர்தல் ஆணையம், அந்த தீர்ப்பை தலைக்கீழாக மாற்றும் சக்திகளுக்கு துணை நிற்பதாகவும் விமர்சித்துள்ளார்.

இது மம்தா பானர்ஜிக்கு மட்டுமல்ல, நியாயமான தேர்தலை விரும்பும் கட்சிகளுக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கட்சி சின்னம் முடக்கம்; பல்டி அடித்த வேட்பாளர்… மம்தா பானர்ஜிக்கு அடுத்தடுத்து விழுந்த அடி

முன்னதாக நந்திகிராம் இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான் தே, முதலமைச்சர் சுவேந்து அதிகாரியை சந்தித்தப் பிறகு வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து, ஊடகங்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, நந்திகிராம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார். இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறினார்.

Read More

Previous Post

முன்னாள் பிரதமர் ரசாக்கின் சிறை வீட்டுக்காவலாக மாற்றப்பட்டது

Next Post

இதுவும் குஜராத்துக்கு தானா.. அலேக்கா தூக்கிக்கொண்டு போன டாடா.. 800 கோடி ரூபாய் மெகா முதலீட்டு திட்டம்! | Tata Group Wins Big Again: Tata Electronics Partners Fujifilm for ₹800 Crore Semiconductor Ecosystem in Gujarat

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In