• Login
Friday, September 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்: வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! | New Passport Rules 2026: Children under 15 Get 5-Year Validity; Check New Fees and Eligibility

GenevaTimes by GenevaTimes
September 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்: வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! | New Passport Rules 2026: Children under 15 Get 5-Year Validity; Check New Fees and Eligibility
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்: வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல மிக முக்கியமான ஒரு ஆவணம் பாஸ்போர்ட். இது நமக்கான முகவரி மற்றும் புகைப்பட அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்போர்ட் அத்தனை எளிதாக கிடைத்துவிடாது. அதற்காக விண்ணப்பம் செய்து கவனமான முறையில் நம் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தான் பாஸ்போர்ட்டே நமக்கு கிடைக்கும்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் விதிகளில் முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் மற்றும் பாஸ்போர்ட் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்: வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பாஸ்போர்ட் (திருத்த) விதிகள், 2026 என்ற பெயரில் இந்த விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி 1980 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளில் உள்ள விதி 12-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் 36 பக்க சாதாரண பாஸ்போர்ட், அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்கு அல்லது குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் வரை (இவற்றில் எது முதலில் வருகிறதோ அது) செல்லுபடியாகும்.

முன்பெல்லாம் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டால், அது வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது குழந்தைக்கு 15 வயது வரை முழுமையாக வழங்கப்படும். ஆனால் புதிய விதியின்படி, உதாரணத்திற்கு ஒரு குழந்தைக்கு 14 வயதாக இருக்கும்போது பாஸ்போர்ட் பெறப்பட்டால், அது வழக்கமாக 5 ஆண்டுகள் அதாவது 19 வயது வரை இருக்க வேண்டும். ஆனால், அந்த குழந்தை தனது 18ஆவது வயதை எட்டியவுடன் அந்த பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிடும். அதாவது, 5 ஆண்டுகள் அல்லது 18 வயது பூர்த்தியடைவது, இதில் எது முதிலில் வருகிறதோ அதுவே இறுதியானது.

முன்னதாக மத்திய அரசு பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்களை மாற்றி அமைத்தது. அந்த புதிய கட்டண விகிதங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துவிட்டன. இதன்படி பெரியவர்களுக்கான 36 பக்க புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கான கட்டணம் 1,500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல 60 பக்க பாஸ்போர்ட் கட்டணம் 2,000 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதுவே பெரியவர்கள் தட்கல் பாஸ்போர்ட் பிரிவில் விண்ணப்பம் செய்தால் 36 பக்கம் கொண்ட பாஸ்போர்ட் கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 60 பக்கம் கொண்ட பாஸ்போர்ட் கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 36 பக்க சாதாரண புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தல் கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 1,750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் விண்ணப்பம் என்றால் 3,000 ரூபாயிலிருந்து 4,250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கு தொடர்ந்து 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த சலுகையானது பாஸ்போர்ட் புதுப்பித்தல் அல்லது சேதமடைந்த/தொலைந்த பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக பெறும் விண்ணப்பங்களுக்கு பொருந்தாது.

Share This Article

English summary

New Passport Rules 2026: Children under 15 Get 5-Year Validity; Check New Fees and Eligibility

பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்: வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! / The Ministry of External Affairs has amended India’s passport rules for children below 15 years of age. Under the Passports (Amendment) Rules, 2026, an ordinary 36-page passport issued to a child under 15 will remain valid for five years from the date of issue or until the child turns 18, whichever is earlier.

Story first published: Friday, September 18, 2026, 13:21 [IST]

Other articles published on Sep 18, 2026

Read More

Previous Post

Good News | வாழ்நாள் முழுவதும் இலவச ரயில் பயணத்தை அறிவித்துள்ள மத்திய அரசு.. நவம்பர் 1 முதல் யாருக்கு இந்த வசதி கிடைக்கும்? | இந்தியா போட்டோகேலரி

Next Post

ஏர்ஆசியாவுக்கு அரசு பிணை எடுப்பு குறித்த பேச்சுக்களை மறுத்த ஃபெர்னாண்டஸ் | Makkal Osai

Next Post
ஏர்ஆசியாவுக்கு அரசு பிணை எடுப்பு குறித்த பேச்சுக்களை மறுத்த ஃபெர்னாண்டஸ் | Makkal Osai

ஏர்ஆசியாவுக்கு அரசு பிணை எடுப்பு குறித்த பேச்சுக்களை மறுத்த ஃபெர்னாண்டஸ் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin