ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? ஒரு மூத்த குடிமகன் SCSS திட்டத்தில் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்து, வட்டி விகிதம் 8.2% ஆக இருந்தால், ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டியாகக் கிடைக்கும். இந்த வட்டி காலாண்டுக்கு ஒருமுறை, அதாவது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். அதாவது, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரூ.61,500 கணக்கில் வரவு வைக்கப்படும். மாத அடிப்படையில் பார்த்தால், இது சராசரியாக மாதம் சுமார் ரூ.20,500 நிலையான வருமானத்திற்குச் சமமாகும். இருப்பினும், இந்தப் பணம் அசல் முதலீட்டின் மீது ஈட்டப்பட்ட வட்டி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரூ.30 லட்சம் என்ற அசல் தொகை இத்திட்டத்திலேயே இருக்கும்; முதலீட்டுக் காலம் முடிவடையும்போது (maturity) விதிமுறைகளின்படி அது திரும்ப வழங்கப்படும்.

