Last Updated:
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஃபசல்ஹக் ஃபாரூக்கிக்கு எதிராக நிதானமாக செயல்பட்ட அபிஷேக் சர்மா, முதல் ஓவரிலேயே எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார்.
இந்திய டி20 சர்வதேசப் போட்டிகளின் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்தார்.
மூன்றாவது டி20ஐ போட்டியில், ஆப்கானிஸ்தான் கேப்டன் டாஸ் வென்று இந்தியாவிற்கு எதிராக முதலில் பந்துவீச்சைத் தீர்மானித்தார். ஆப்கானிஸ்தான் அணி தங்களது ஆடும் லெவனில் இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளது. அதேசமயம், இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு யஷ் தாக்கூர் தனது சொந்த மண்ணில் முதல் சர்வதேசப் போட்டியில் களமிறங்கினார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்துள்ளது.
இந்த இமாலய ரன்கள் குவிப்பிற்கு இந்திய வீரர் அபிஷேக் சர்மாவின் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த சாதனை அடக்கம். இந்திய டி20 சர்வதேசப் போட்டிகளின் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த சாதனையை அபிஷேக் சர்மா இன்று முறியடித்தார். வெறும் 30 பந்துகளில் சதம் அடித்த அவர் இதன் மூலம், 2017-ஆம் ஆண்டு இந்தூரில் இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் ஒரு சதம் அடித்திருந்த ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஃபசல்ஹக் ஃபாரூக்கிக்கு எதிராக நிதானமாக செயல்பட்ட அபிஷேக் சர்மா, முதல் ஓவரிலேயே எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். அதிரடியை காண்பிக்க தொடங்கிய அவர் இரண்டாவது ஓவரில் அஸ்மத்துல்லா ஓமர்சாயைக் குறிவைத்த அவர் லெக் சைடு மற்றும் ஸ்வீப்பர் கவர் சைடில் சிக்ஸர்களை விளாசினார். தொடர்ச்சியாக ஐந்தாவது ஓவரில் முகமது நபியின் பந்தில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிக்கு விளாசி வெறும் 14 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.
அபிஷேக்கின் அதிரடிக்கு ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் மற்றும் முஜீப்-உர்-ரஹ்மான் ஆகியோரும் தப்பவில்லை. எட்டாவது ஓவரில் ரஷீத் கானின் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், ஒன்பதாவது ஓவரில் முஜீப்-உர்-ரஹ்மானின் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்களையும் அபிஷேக் அடித்தார். ஒன்பதாவது ஓவரில் அப்துல்லா அஹ்மத்சாயின் பந்துவீச்சில் ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை அடித்து 99 ரன்களை எட்டிய அவர், 30வது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து சதத்தை நிறைவு செய்தார். அபிஷேக்கின் ஆட்டம் 108 ரன்களில் முடிவுக்கு வந்தது.
அபிஷேக் சர்மா சாதனை சதம் அடித்தார் என்றால் அவரோடு ஓப்பனிங் இறங்கிய சஞ்சு சாம்சன் தன் பங்கிற்கு ஆப்கன் பந்துவீச்சை மீண்டும் ஒரு முறை துவம்சம் செய்து அரைசதம் அடித்தார். இந்த இருவரின் ஆட்டத்தால் இந்திய அணி 221 ரன்கள் குவித்துள்ளது.


