நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (17) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ள நிலையில், சில வங்கிகளில் மாற்றமின்றி காணப்படுகிறது.
சேலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.75 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
தொடரும் வீழ்ச்சி
NDB வங்கியில் கொள்வனவு விலை 327.50 ரூபாயிலிருந்து 327.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.50 ரூபாயிலிருந்து 336.75 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 327.91 ரூபாயிலிருந்து 328.15 ரூபாயாகவும், விற்பனை விலை 336.04 ரூபாயிலிருந்து 336.29 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 326.08 ரூபாயாகவும், விற்பனை விலை 336.00 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
இதனிடையே, சம்பத் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 328.00 ரூபாயிலிருந்து 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.00 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

