Last Updated:
பிரதமரின் இந்தப் பயணத்தை வெறும் அரசியல் சாதனையாக மட்டும் பார்க்காமல், தேசத்திற்கும் மக்களுக்கும் ஆற்றப்பட்ட அர்ப்பணிப்புள்ள சேவையாகப் பார்க்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் மற்றும் அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்வுச் சேவையைக் குறிக்கும் வகையில், ‘சேவா சங்கல்ப் அபியான்’ (Seva Sankalp Abhiyan) என்ற ஒரு மாத கால மக்கள் சேவைப் பிரச்சாரத்தை பாஜக இன்று நாடு முழுவதும் தொடங்கியது.
இந்தப் பிரச்சாரம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் குறிக்கும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் அவர் மக்கள் சேவையில் கால் பதித்து 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். பிரதமர் மோடி 2001 அக்டோபர் 7 அன்று குஜராத் மாநில முதலமைச்சராக முதன்முதலில் பொறுப்பேற்றுத் தனது பொதுச் சேவையைத் தொடங்கினார். அதிலிருந்து இன்று வரை 25 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மக்கள் நலனுக்காக உழைத்து வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக ஆண்டுதோறும் ‘சேவா திவாஸ்’ (சேவை நாள்) ஆகக் கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டும் ‘சேவா சங்கல்ப் அபியான்’ நடத்தப்படுகிறது.
இது குறித்துப் பேசிய நிதின் நபின், “பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால சேவை, வளர்ச்சி மற்றும் தேசக் கட்டமைப்புக் பணிகளைச் சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பது பாஜகவின் கடமையாகும். பிரதமரின் இந்தப் பயணத்தை வெறும் அரசியல் சாதனையாக மட்டும் பார்க்காமல், தேசத்திற்கும் மக்களுக்கும் ஆற்றப்பட்ட அர்ப்பணிப்புள்ள சேவையாகப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சாரத்தை மகாபலிபுரத்தின் பாணியில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகாகாலேஸ்வரர் நகரமான மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் இருந்து பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்வில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் மாநில பாஜக தலைவர் ஹேமந்த் கண்டேல்வால் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் பல்வேறு இரத்த தான முகாம்கள், தூய்மைப் பணிகள், மருத்துவ முகாம்கள், கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடத்தப்படவுள்ளன


