அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் மற்றும் பிள்ளைகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பை கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய குடிவரவு விதிகளை அறிமுகப்படுத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய குடிவரவு திட்டத்தின் கீழ், சர்வதேச மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவதை நடைமுறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையில், தகுதியுடைய மாணவர் விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு வர முடியும்.
அவுஸ்திரேலியா அரசாங்கம்
மாணவர் விசா விண்ணப்பங்களில் தகுதியுடைய குடும்ப உறுப்பினர்களுக்கான கல்வி மற்றும் சுகாதார காப்புறுதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் குறிப்பிடப்படுகின்றன.

மேலும், தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் ஒரு விசா காலாவதியான பின்னர் மற்றொரு விசாவுக்கு மாறுவதன் மூலம் நாட்டில் தொடர்ந்து தங்குவதை கட்டுப்படுத்தவும் புதிய நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
2028ஆம் ஆண்டுக்குள் அவுஸ்திரேலியாவின் வருடாந்த நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 300,000 இலிருந்து 225,000 ஆகக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்காக தற்காலிக விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

