காஸாவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 7 தளங்களைக் கொண்ட குடியிருப்பு கட்டடம் நேற்று புதன்கிழமை அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் 5 குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இடிபாடுகளுக்குள் சிக்கிய 100-க்கும் அதிகமான மக்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எம தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


