• Login
Thursday, September 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் ஹால்மார்க் கட்டணம் 67% உயர்வு.. அப்போ தங்கம் விலையும் உயருமா? | Gold Hallmark Fee Jumps 67% to ₹75: Will This Push Up Gold Jewellery Prices in India?

GenevaTimes by GenevaTimes
September 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் ஹால்மார்க் கட்டணம் 67% உயர்வு.. அப்போ தங்கம் விலையும் உயருமா? | Gold Hallmark Fee Jumps 67% to ₹75: Will This Push Up Gold Jewellery Prices in India?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் ஹால்மார்க் கட்டணம் 67% உயர்வு.. அப்போ தங்கம் விலையும் உயருமா?

நம் நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி நகை, நாணயம் உள்ளிட்ட அனைத்திற்கும் ஹால்மார்க் குறியீடு கட்டாயம். அதாவது நாம் வாங்குவது உண்மையான தங்கம் மற்றும் வெள்ளி தான் என்பதற்கான ஒரு சான்று தான் ஹால்மார்க் குறியீடு.

தங்கம், வெள்ளி நகை மற்றும் நாணயங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை இந்திய தர நிர்ணய அமைப்பான BIS-இன் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கும். இங்கே அந்த தங்கமும் வெள்ளியும் ஆய்வு செய்யப்பட்டு அதன் கேரட் அளவு அதில் எவ்வளவு தங்கம் உள்ளது என்ன வகையான ஆபரணம் என்பன உள்ளிட்டவற்றை எல்லாம் தர ஆய்வு செய்து ஹால்மார்க் முத்திரை வழங்கும். இதன் பின்னர் தான் இவை கடைகளுக்கு வந்து நமக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தங்கம் ஹால்மார்க் கட்டணம் 67% உயர்வு.. அப்போ தங்கம் விலையும் உயருமா?

இந்நிலையில் ஹால்மார்க் கட்டணங்களில் இந்திய தர நிர்ணய அமைப்பு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக, தங்க ஹால்மார்க் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பின் திருத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி, தங்கத்திற்கான ஹால்மார்க் கட்டணம் 67% உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரு தங்கப் பொருளுக்கு ஹால்மார்க் செய்ய 45 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு, 75 ரூபாயாக உள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு செப்டம்பர் 14 முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, ஹால்மார்க் மையங்களுக்கு அனுப்பப்படும் தங்க பொருட்களுக்கு குறைந்தபட்ச சரக்கு கட்டணமாக 200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான நகைகளை ஹால்மார்க் செய்வோருக்கு இதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். ஹால்மார்க் கட்டணம் உயர்வால் நகை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதனை வாடிக்கையாளர்கள் மீதே சுமத்த வாய்ப்புள்ளது. ஒரே சீராக இல்லாமல் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் செலவுகளுக்கு ஏற்ப இந்த கட்டணங்களை நகை விற்பனை விலையில் சேர்க்கலாம்.

ஏனெனில் ஒன்று அல்லது இரண்டு நகைகளை மட்டும் ஹால்மார்க் செய்ய கொடுப்பவர்கள் 200 ரூபாய் என்ற குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்த வேண்டியிருப்பதால், அவர்களுக்கு கட்டணம் சற்று கூடுதலாகவே விழும். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகைகளை சமர்ப்பிப்பவர்கள், திருத்தப்பட்ட புதிய கட்டணமான 75 ரூபாய் வீதம் பணம் செலுத்தினால் போதும்.

வெள்ளி பொருட்களை பொறுத்தவரை எந்தவித கட்டண உயர்வும் செய்யப்படவில்லை. வெள்ளி பொருட்களுக்கான ஹால்மார்க் கட்டணம் பழையபடி ஒரு பொருளுக்கு 35 ரூபாய் என்ற நிலையிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனையில் இன்று 22 கேரட் தங்கம் 10 கிராம் 1.40 லட்சத்திற்கும் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 2.55 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சிறிய அளவிலான நகை தயாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திருத்தப்பட்ட கட்டண அமைப்பு ஹால்மார்க் செலவுகளை சற்று அதிகரித்துள்ளது.

Share This Article

English summary

Gold Hallmark Fee Jumps 67% to ₹75: Will This Push Up Gold Jewellery Prices in India?

தங்கம் ஹால்மார்க் கட்டணம் 67% உயர்வு.. அப்போ தங்கம் விலையும் உயருமா? / The Bureau of Indian Standards (BIS) has raised the hallmarking fee for gold articles by 67%, from ₹45 to ₹75 per piece, with effect from September 14, 2026, and introduced a minimum consignment charge of ₹200 for gold submissions.

Story first published: Wednesday, September 16, 2026, 15:11 [IST]

Other articles published on Sep 16, 2026

Read More

Previous Post

மேஜையில் தவெக அமைச்சர்கள்.. குப்பைத் தொட்டி அருகே தொண்டர்களுக்கு உணவா?.. திருப்பத்தூரில் பரபரப்பு | TVK Event Sparks Controversy: Leaders Dine at Tables While Supporters Eat Near Garbage Bins

Next Post

DECODE | மெக்காவை குறிவைத்து ஹூதி தாக்குதல்? RED LINE-ஐ தாண்டிய ட்ரோன்! என்ன நடந்தது? | Houthi | Saudi

Next Post
DECODE | மெக்காவை குறிவைத்து ஹூதி தாக்குதல்? RED LINE-ஐ தாண்டிய ட்ரோன்! என்ன நடந்தது? | Houthi | Saudi

DECODE | மெக்காவை குறிவைத்து ஹூதி தாக்குதல்? RED LINE-ஐ தாண்டிய ட்ரோன்! என்ன நடந்தது? | Houthi | Saudi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin