• Login
Wednesday, September 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்.. இந்திய அணிக்கு மாஸ் கம்பேக் கொடுத்த 8 வீரர்கள்! | CSK Captain Ruturaj Gaikwad has been included in the Indian ODI squad for Shreyas iyer replacement

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட்.. இந்திய அணிக்கு மாஸ் கம்பேக் கொடுத்த 8 வீரர்கள்! | CSK Captain Ruturaj Gaikwad has been included in the Indian ODI squad for Shreyas iyer replacement
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Wednesday, September 16, 2026, 21:48 [IST]

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜெய்ஸ்வால், நமன் திர், ஜுரெல், சிராஜ், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா உள்ளிட்டோர் கம்பேக் கொடுத்துள்ளனர்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ளது. திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், கவுகாத்தியில் செப்டம்பர் 30ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டியும், சண்டிகரில் அக்டோபர் 3ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டியும் நடக்கவுள்ளது.

Ruturaj Gaikwad

இதன்பின் அக்டோபர் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 5 டி20 போட்டிகளில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாட இருக்கின்றன. இதற்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒருநாள் தொடரின் போது இந்திய டி20 ஆசியப் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதனால் ஒருநாள் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை.

இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கான மாற்று வீரராக நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட், அதன்பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் அக்சர் படேல் இடத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பின் ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார்.

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சனின் புது பொறுப்பு.. என்ன நடந்தது?

சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சனின் புது பொறுப்பு.. என்ன நடந்தது?

தொடர்ந்து சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல், ஆகிப் நபி, மும்பை அணிக்காக ஆடி வரும் நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் துணைக் கேப்டன் பொறுப்பு கேஎல் ராகுல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் அணியில் உள்ளனர். இதன் மூலமாக 8 வீரர்கள் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளனர்.

இந்திய அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், கேஎல் ராகுல், துருவ் ஜுரெல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குர்னூர் ப்ரார், ஆகிப் நபி, ஜெய்ஸ்வால், நமன் திர்.

இந்திய டி20 அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.

English summary

CSK Captain Ruturaj Gaikwad has been included in the Indian ODI squad for Shreyas iyer replacement

Read More

Previous Post

Tamilmirror Online || ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்

Next Post

இனிமே Gpay free இல்லையா? மத்திய அரசின் புதிய விதி சொல்வது என்ன?

Next Post
இனிமே Gpay free இல்லையா? மத்திய அரசின் புதிய விதி சொல்வது என்ன?

இனிமே Gpay free இல்லையா? மத்திய அரசின் புதிய விதி சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin