Last Updated:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அச்சமூட்டும் வேகத்தில் முன்னேறி வருவதாக கவலை தெரிவித்துள்ள முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அதன் வளர்ச்சி வேகத்தைப் பொறுப்புடன் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களின் தலைவர்கள் AI-யின் மேம்பாட்டு வேகத்தைக் குறைக்குமாறு விடுத்த அழைப்புகளால் ஊக்கமடைந்ததாகக் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அச்சமூட்டும் வேகத்தில் முன்னேறி வருவதாக கவலை தெரிவித்துள்ள முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அதன் வளர்ச்சி வேகத்தைப் பொறுப்புடன் குறைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் அமெரிக்கா சீனாவை விட முன்னிலையில் இருப்பதை உறுதி செய்துகொண்டே, புத்திசாலித்தனமாக ஒழுங்குபடுத்த விரும்புவதாக தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், செயற்கை நுண்ணறிவு பற்றி அச்சமூட்டுதல், மோதல் மற்றும் கடுமையான போட்டி ஆகியவை யாருடைய நலனுக்கும் உதவாது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா வலியுறுத்தியுள்ளார்.