• Login
Wednesday, September 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: துணைத் தூதரகம் விசேட அறிவிப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: துணைத் தூதரகம் விசேட அறிவிப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
சமூகம்
/
சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: துணைத் தூதரகம் விசேட அறிவிப்பு

சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு, ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர அறிவிப்பு விடுத்துள்ளது.


சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில்கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ அவசர எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

தமது கையடக்கத் தொலைபேசிகளுக்குத் தேசிய அவசர எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்தால், உடனடியாக ஜன்னல்களிலிருந்து விலகிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

திறந்த வெளிகளில் இருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டடங்களுக்குள் செல்ல வேண்டும் அல்லது பலமான சுவர்களின் மறைவில் தஞ்சம் அடைய வேண்டும் எனவும், வெட்டவெளிகள், கண்ணாடிகள், பால்கனிகள் மற்றும் கூரைப்பகுதிகளைத் தவிர்க்குமாறும் துணைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாகனங்களைச் செலுத்துவோர் இவ்வாறான அவசர எச்சரிக்கையைப் பெற்றால், உடனடியாகப் பாலங்கள் மற்றும் உயரமான கட்டடங்களிலிருந்து தூரமாக வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆபத்து நீங்கிவிட்டதாக அதிகாரிகள் அறிவிக்கும் வரை காத்திருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், மக்கள் நெரிசலான இடங்கள் மற்றும் ஆபத்து சாத்தியமுள்ள பகுதிகளைத் தவிர்க்குமாறும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்த்து உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரமே நம்புமாறும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, இவ்வாறான சம்பவங்களைப் புகைப்படம் அல்லது வீடியோ பதிவு செய்வதோ, அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதோ, கருத்துகளை வெளியிடுவதோ கூடாது என எச்சரித்துள்ள தூதரகம், சவூதி அரேபியாவின் சட்ட திட்டங்களை முழுமையாகப் பின்பற்றுமாறும் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் அவசரத் தேவைகளுக்காக மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்களில் 911 என்ற இலக்கத்தையும், ஏனைய பிராந்தியங்களில் 998 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்படின் ஜித்தாவிலுள்ள துணைத் தூதரகத்தின் 056 098 6671 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

கே.ஜே.ஆரின் “அங்கீகாரம்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post

யூபிஐ-இல் OTT மற்றும் மியூச்சுவல் ஃபண்டு SIP செலுத்தினால் MDR கட்டணம் உண்டா? மக்களே கவனம்..!! | UPI MDR from Oct 15: OTT Subscriptions & Mutual Fund SIPs via AutoPay Remain Free — No Extra Charges for Consumers

Next Post
யூபிஐ-இல் OTT மற்றும் மியூச்சுவல் ஃபண்டு SIP செலுத்தினால் MDR கட்டணம் உண்டா? மக்களே கவனம்..!! | UPI MDR from Oct 15: OTT Subscriptions & Mutual Fund SIPs via AutoPay Remain Free — No Extra Charges for Consumers

யூபிஐ-இல் OTT மற்றும் மியூச்சுவல் ஃபண்டு SIP செலுத்தினால் MDR கட்டணம் உண்டா? மக்களே கவனம்..!! | UPI MDR from Oct 15: OTT Subscriptions & Mutual Fund SIPs via AutoPay Remain Free — No Extra Charges for Consumers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin