• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

எனது அன்பான சக மலேசியர்களே; உங்கள் அனைவருக்கும் Selamat Hari Malaysia வாழ்த்துகள். | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
எனது அன்பான சக மலேசியர்களே; உங்கள் அனைவருக்கும் Selamat Hari Malaysia வாழ்த்துகள். | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த ஐந்து ஆண்டுகளாக, தேசிய தினம் மற்றும் மலேசியா தினம் நுண்ணறிவு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள வேகமாக மாறிவரும் உலகம் போன்றவை அவற்றில் அடங்கும். இந்த சவால்கள் இன்னும் முக்கியமானவை யாகவும் பொருத்தமானவையாகவும் தொடர்கின்றன. இந்த ஆண்டு, அதைவிட அடிப்படையான ஒரு விஷயத்தை பற்றி நான் பேச விரும்புகிறேன். அதாவது ஒரு மக்களாக நாம் யார் என்பது பற்றிதான்.

நான் அடிக்கடி எனக்குள் ஒரு எளிய கேள்வியை கேட்டுக்கொள்வேன். எல்லா மலேசியர்களுக்கும் பொதுவானது என்ன?பற்றிய எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். ஒவ்வோர் ஆண்டும், நமது அன்பான தேசம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து நான் சிந்தித்து பார்த்ததுண் நமது பொருளாதாரம், கல்வி, ஊழல், அரசியல் சீர்திருத்தங்கள், காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள வேகமாக மாறிவரும் உலகம் போன்றவை அவற்றில் அடங்கும்.

இந்த சவால்கள் இன்னும் முக்கியமானவை யாகவும் பொருத்தமானவையாகவும் தொடர்கின்றன. இந்த ஆண்டு, அதைவிட அடிப்படையான ஒரு விஷயத்தை பற்றி நான் பேச விரும்புகிறேன். அதாவது ஒரு மக்களாக நாம் யார் என்பது பற்றிதான். நான் அடிக்கடி எனக்குள் ஒரு எளிய கேள்வியை கேட்டுக்கொள்வேன். எல்லா மலேசியர்களுக்கும் பொதுவானது என்ன?. நாம் மலாய், சீனர், இந்தியர், இபான், கடாசான், ஒராங் அஸ்லி அல்லது யூரேசியராக இருப்பதற்கு முன்பு, நாம் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாக அல்லது வெவ்வேறு கருத்துக்களை கொண்டவர்களாக இருப்பதற்கு முன்பு, நாம் யார்?

நாம் அனைவரும் மலேசியாவின் மகன்கள், மகள்கள். நம்மில் பலர் கணவன் மற்றும் மனைவியாகின்றோம். பலர் தாய் மற்றும் தந்தையாகிறோம். நமது குழந்தைகள் வெற்றி பெறும்போது நாம் கொண்டாடுகிறோம். அவர்கள் சிரமப்படும்போது நமக்கு தூக்கம் வருவதில்லை. நமது பெற்றோர் வயதாகும்போது நாம் கவலைப்படு கிறோம். நாம் நேசிப்பவர்கள் நம்மை விட்டு பிரியும்போது நாம் துயரப்படுகிறோம். அடுத்த தலைமுறை நாம் வாழ்ந்ததை விட சிறந்த வாழ்கையை அனுபவிக்கவேண்டும் என்று நாம் நம்புகிறோம். மற்ற எல்லாவற்றையும் நாம் ஒதுக்கி வைத்து விட்டு பார்க்கும்போது, அழகானதும் ஞானத்தை தரக்கூடியதுமான ஒன்றையும் நாம் கண்டுகொள் கிறோம். நாம் வேறுபட்டிருப்பதை விட ஒருவருக்கொருவர் மிகவும் ஒத்தவர்களாகவே இருக்கிறோம்.

நான் பேராக் மாநிலத்தில் உள்ள பூசிங் என்ற சிறிய நகரத்தில் வளர்ந்தேன். எனது நெருங்கிய குழந்தை பருவ நண்பர்கள் மலாய், சீன மற்றும் இந்தியர்களாக இருந்தனர். நாங்கள் ஒன்றாக விளையாடுவோம். பழைய சுரங்க குட்டைகளிலும் ஆறுகளிலும் ஒன்றாக நீந்தினோம். நாங்கள் அடிக்கடி ஒருவர் வீட்டிற்கு மற்றவர் சென்று இரவு தங்குவதும் உண்டு. யாரையாவது நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் கேட்டதாக எனக்கு உண்மையில் நினைவில்லை.

குழந்தைகளுக்கு ஓர் அற்புதமான பரிசு உள்ளது. ‘அவர்கள் முதலில் முத்திரைகளை பார்பதற்கு முன் மனிதர்களை பார்கிறார்கள். வயது வந்த பிறகான பயணத்தில் எங்கோ நாம் அந்த ஞானத்தில் சிறிது இழந்துவிடுகிறோம் என்று தோன்றுகிறது. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மனிதகுலத்திற்கு ஒரு பரிசாகும். நமது தோலின்நிறத்தையும் நாம் எங்கு பிறந்தோம் என்பதையும் தேர்வு செய்யும் கொடுப்பினை நம்மில் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று நான் கேட்டதாக எனக்கு உண்மையில் நினைவில்லை. குழந்தைகளுக்கு ஓர் அற்புதமான பரிசு உள்ளது. அவர்கள் முதலில் முத்திரைகளை பார்பதற்கு முன் மனிதர்களை பார்கிறார்கள். வயது வந்த பிறகான பயணத்தில் எங்கோ நாம் அந்த ஞானத்தில் சிறிது இழந்துவிடுகிறோம் என்று தோன்றுகிறது.

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மனிதகுலத்திற்கு ஒரு பரிசாகும். நமது தோலின்நிறத்தையும் நாம் எங்கு பிறந்தோம் என்பதையும் தேர்வு செய்யும் கொடுப்பினை நம்மில் யாருக்கும் கிடைக்கவில்லை. நம்பிக்கை என்பது உண்மையில் மிகவும் தனிப்பட்ட விஷயமாகும் நாம் பேசிய முதல் மொழியையும் நாம் இந்த உலகில் நுழைந்த குடும்பத்தையும் நம்மில் யாரும் தேர்வு செய்யவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் எந்த மாதிரியான மலேசியராக மாற விரும்புகிறோம் என்பதை நம்மில் ஒவ்வொருவரும் முடிவு செய்யலாம். அந்த தேர்வு எப்போதும் நம்முடையதாகவே இருந்துள்ளது. அது எப்போதும் அப்படியே இருக்கும்.

நமது நம்பிக்கை எதுவாக இருந்தாலும் அனைத்து மதங்களும் ஒரே அடிப்படை உண்மையையும் ஞானத்தையும் நமக்கு கற்பிக்கின்றன. அதாவது ஒவ்வொரு மனித உயிருக்கும் கண்ணியம் உள்ளது. நமது நம்பிக்கை எதுவாக இருந்தாலும், இனம் அல்லது மதத்தின் காரணமாக இன்னொரு மனிதனை வெறுக்குமாறு எந்த மதமும் நமக்கு கற்பிப்பதில்லை. சன்வேயில் நான் எப்போதும் நம் நிற பாகுபாடு இல்லாமல், கடப்பிதழ் பாகுபாடு இல்லாமல் மற்றும் மதபாகுபாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறேன். பல்வேறு கலாச்சாரங்களையும் நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு நாடாக, நமது பன்முகத்தன்மை நிச்சயமாக போற்றப்பட வேண்டிய ஒரு வலிமையாகும். அனைவரும் கண்ணியத் துடனும் இந்த நமக்கு சொந்தம் என்ற உண்மையான உணர்வுடனும்வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டமைக்கும் நமது உறுதியை மேலும் ஆழப்படுத்த வேண்டும். வெறுப்பு கற்றுக்கொள்ளப்படுகிறது. மரியாதையையும் கற்றுக் கொள்ளலாம். பிரிவினை வளர்க்கப்படுகிறது. ஒற்றுமையையும் வளர்ககலாம்.

நம்மை நோக்கியுள்ள கேள்வி மலேசியா மேலும் ஓர் ஒற்றுமையான தேசமாக மாற முடியுமா என்பது அல்ல. கேள்வி என்னவென்றால், நம்மில் ஒவ்வொருவரும் அதிக பெருந்தன்மையான மலேசியராக மாறுவதற்குத் தயாராக இருக்கிறோமா என்பதுதான். ஏனென்றால் நாடுகள் தானாகவே சிறப்பாக மாறுவதில்லை. மக்கள்தான் அவ்வாறு மாற்றுகிறார்கள். வரலாறு முழுவதும், மக்களை ஒன்றிணைத்தவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, நம்மை பிரிக்க முயன்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

பிரிவினை எளிதானது. ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தைப் பார்த்து பயப்பட வைப்பதற்கு ஒரு சிறிய முயற்சியே போதும். நம்பிக்கையை கட்டமைப்பதற்கு மிக அதிக துணிச்சல் தேவை. பெரும்பாலும், சரியானதையும் நீதியானதையும் செய்வதற்கு அதிக விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு தேசமாக நம்மை இணைக்கும் கொள்கைகளை நிலைநாட்டுவதில் நாம் நமது நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தலைமுறையும் இறுதியில் அது கட்டிய பாலங்கள் அல்லது அது விட்டுச்சென்ற சுவர்களால் நினைவு கூறப்படும். நமது தலைமுறையும் அதற்கு விதிவிலக்கல்ல. நமது வேறுபாடுகளுக்காக நாம் சண்டையிட்டு வாதிடுவதில் செலவிட்ட அதே ஆற்றலை, நமது பொதுவான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு செலவிட் டிருந்தால் மலேசியா இன்னும் எவ்வளவு தூரம் முன்னேறி யிருக்கும் என்று சில நேரங்களில் நான் யோசிப்பேன்.

ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள், கடுமையான கோஷங்களை உருவாக்குவதற்கு பதிலாக சிறந்த பள்ளிகளைக் கட்டுவதற்கு நாம் போட்டியிட்டால் எப்படி இருக்கும், நாம் ஒருவரையொருவர் தூற்றுவதற்கு பதிலாக நம் குழந்தைகளின் கல்விக்காக அதிகம் முதலீடு செய்தால் எப்படி இருக்கும். உரத்த குரல்களுக்காக அல்லாமல், ஒரு சிறந்த தேசத்தை எப்படி கட்டமைப்பது என்ற மிகச்சிறந்த யோசனைகளுக் காக நாம் அறியப் பட்டால் எப்படி இருக்கும் என்றும். கற்பனை செய்து பாருங்கள். உலகளாவிய அளவில், அமெரிக்காவும் சீனாவும் எதிரிகளாக அல்லாமல் சகோதர்களாக ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு முன்வந்தால், இந்த உலகம் மனிதகுலம் அனைவருக்கும் மிகவும் சிறந்த இடமாக மாறும். நான் சிறுவனாக இருந்தபோது

வறுமை என் வாழ்கையை வடிவமைத்தது. கஷ்டமும் துயரமும் நிறைந்த வாழ்வில் இருந்து கண்ணியமான வாழ்கைக்கு செல்வதற்கான மிக சக்திவாய்ந்த வழி கல்விதான் என்பதை அது எனக்கு கற்றுக்கொடுத்தது. அந்த நம்பிக்கை ஒருபோதும் என்னை விட்டு நீங்கவில்லை. என் வணிக வாழ்க்கையின் வெற்றி, இனம் மற்றும் பின்னணி பாராமல் முடிந்தவரை அதிகமான இளம் மலேசியர்களுக்கு தரமான கல்வியை கிடைக்க செய்யும் நோக்கில் ஜெஃப்ரி சியா அறநிறுவனத்தை தொடங்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அதனால்தான் சன்வே கல்வி குழுமத்தில் உள்ள எனது முழு பங்குகளையும் நிரந்தரமாக சன்வே பள்ளிகள், சன்வே கல்லூரிகள் மற்றும் சன்வே பல்கலைக்கழகம் ஆகியவற்றை ஜெஃப்ரி சியா அறநிறுவனத்திற்கு லாப நோக்கமற்ற கட்டமைப்பில் மாற்றினேன். இந்த நிறுவனம் இனி எனக்கோ அல்லது என் குடும்பத்திற்கோ சொந்தமானது அல்ல. இது தற்போதைய மற்றும் எதிர்கால மலேசியர்களின் நலனுக்காக மலேசியாவுக்கு சொந்தமானது.

இந்த நிறுவனத்தின் மூலம் ரிம.4 பில்லியனுக்கும் அதிகமாக நிதி வழங்கப்பட்டு நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரிம.1.05 பில்லியனுக்கும் அதிகமாக கல்வி உதவித் தொகைகளாகவும் மானியங்களாகவும் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்படும் ஒவ்வொரு கல்வி உதவித்தொகையும் வெறும் ஒரு மாணவர் கல்லூரிக்கோ பல்கலைக்கழகத் திற்கோ செல்வது மட்டுமல்ல. அது வறுமை மற்றும் துயரத்தின் தீய சுழற்சியிலிருந்து ஒரு குடும்பம் மீட்கப்படுவதாகும். ஒரு கனவு மீட்டெடுக்கப் படுகிறது. ஒரு எதிர்காலம் மீண்டும் எழுதப்படுகிறது. என்னை பொறுத்தவரை அதுதான் தேசத்தை கட்டமைத்தல். ஆனால் அரசாங்கங்கள் மட்டும் ஒரு சிறந்த நாட்டை கட்டமைக்க முடியாது. வணிகங்கள், பள்ளிக, சமய அமைப்புகள் மற்றும் பெற்றோர்களாலும் தனியாக அதைச் செய்ய முடியாது. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு சிறந்த மலேசியா என்பது நாம் வாரிசாக பெறும் ஒன்றல்ல. அது நாம் அனைவரும் சேர்ந்து கட்டமைக்கும் ஒன்றாகும்.

உலகம் நமக்காக காத்திருக்காது செயற்கை நுண்ணறிவு நாம் வாழும், கற்கும் மற்றும் வேலை செய்யும் விதத்தை மாற்றி வருகிறது. காலநிலை மாற்றம் நம் எதிர்காலத்தை மறுவடிவமைக்கிறது. நம் அண்டை நாடுகளும் உலகின் பிற நாடுகளும் புத்தாக்கம், கல்வி மற்றும் மனிதவளத்தில் பெருமளவில் முதலீடு செய்கின்றன. உலகம் முன்னேறிச் செல்லும் போது, பயம், சந்தேகம் மற்றும் முடிவில்லா பிளவுகளால் கவனம் திசைதிருப்பப்பட்டு மலேசியா பின்தங்கி விட முடியாது. நம் குழந்தைகள் அதை விட சிறந்ததற்கு தகுதியானவர்கள். உலகின் பிற நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு நம்பிக்கையுள்ள ஒரு நாட்டிற்கு அவர்கள் தகுதியானவர்கள்.

மலேசியா வட்டார அளவிலோ, உலக அளவிலோ போட்டித்திறன் கொண்டதாக இருக்குமா என்பது, நம் அடுத்த தலைமுறை அந்த போட்டிக்கு எவ்வளவு சிறப்பாக தயாராக இருக்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது. தந்தையராக, தாய்மார்களாக மற்றும் தாத்தா பாட்டிகளாக நம் கடமை, மிகவும் கடுமையான, தீவிரமான மற்றும் ஓயாத இந்த போட்டியை எதிர்கொள்ள நம் அடுத்த தலைமுறையை தயார்படுத்துவதே ஆகும். நமக்கு முன்னால் இவ்வளவு சவால்கள் இருந்தபோதிலும், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் இளம் மலேசியர்களை சந்திக்கும் போதெல்லாம், அவர்களின் ஆர்வம், படைப்பாற்றல், கருணை மற்றும் நம்பிக்கை என்னை ஊக்குவிக்கிறது.

ஒருவேளை என்னுடைய தலை முறையும் சேர்த்து, முந்தைய தலைமுறையினர் சில நேரங்களில் தவறவிட்ட இடத்தில் இவர்கள் வெற்றி பெறலாம். ஒருவேளை நாம் எப்போதும் கனவு கண்ட மலேசியாவை இவர்கள் இறுதியாக கட்டமைக்கலாம். அவர்களால் முடியும் என்று நான் மனதார நம்புகிறேன், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நாம் அனைவரும் ஒரு நாள் இந்த உலகை விட்டுச் செல்வோம். நாம் எந்த அரசியல் கட்சியை ஆதரித்தோம் என்பதை மக்கள் நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லை. சமூக ஊடகங்களில் நாம் சண்டையிட்டு விவாதித்த வாதங்களையும் அவர்கள் ஒருவேளை நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் நாம் கண்டெடுத்ததை விட மலேசியாவை சிறந்த நிலையில் விட்டுச் சென்றோமா இல்லையாஎன்பதை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.

அதிக கருணையுடன், அதிக நேர்மையுடன், அதிக ஒற்றுமையுடன், அதிக நிலைத் தன்மையுடன் மற்றும்அதிக நம்பிக்கையுடன். என்னை பொறுத்தவரை அதுதான் தேசபக்தியின் உண்மையான அர்த்தம். இன்று நாடு எப்படி இருக்கிறதோ அதற்காக மட்டும் நேசிப்பதல்ல, நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய மலேசியாவாக அதை மாற்ற உதவும் அளவுக்கு நேசிப்பதே ஆகும். இது நம் வீடு மற்றும் நாம் பகிர்ந்துகொண்ட பாரம்பரியம். இது நம் பொறுப்பு மற்றும் நாம் பகிர்ந்துகொண்ட விதி.

அடுத்த தலைமுறை கடந்து செல்லும் அளவுக்கு வலுவான பாலங்களை அமைப்போம். நம் அன்பான நாட்டிற்கு அதிக நிலையான, நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவோம். ஏனெனில் நாம் விட்டு செல்லும் மலேசியாவே நம் குழந்தைகள் வாரிசாக பெறப்போகும் மலேசியா. உறுதியுடன், ஒன்றாக இணைந்து, அவர்களுக்கு தகுதியான ஒரு தேசத்தை கட்டமைப்போம். நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம், நாம் அனைவரும் நாம் அனைவரும் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுவோம்.

Selamat Hari Malaysia

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ சர் டாக்டர் ஜெஃப்ரி சியா

நானும் ஒரு மலேசியன்



Read More

Previous Post

UPI: 300 ரூபாய் கட்டணம்.. யாருக்கு இந்த பணம் போகிறது..? மக்களுக்கு தான் அதிக சேதம்.. எப்படி? | UPI MDR Charges Explained: Who Gets the 0.4% Fee and How It Could Impact common man

Next Post

ஈரானை இலக்கு வைத்து எட்டு நாடுகளின் மூத்த இராணுவத் தலைவர்களை சந்தித்த CENTCOM!

Next Post
ஈரானை இலக்கு வைத்து எட்டு நாடுகளின் மூத்த இராணுவத் தலைவர்களை சந்தித்த CENTCOM!

ஈரானை இலக்கு வைத்து எட்டு நாடுகளின் மூத்த இராணுவத் தலைவர்களை சந்தித்த CENTCOM!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin