Last Updated:
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
ஆப்கன் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த 3 போட்டிகளுமே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான இப்ராகிம் சத்ரான் 37 ரன்க்ள எடுத்தார்.
தர்விஷ் ரசூலி 26 ரன்களும், முகமது நபி 20 ரன்களும், ரஷித் கான் 28 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் நிதிஷ் குமார் ரெட்டி 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 4 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சன் அரைச்சதம் கடந்து 22 பந்துகளில் 4 சிக்சர் 7 பவுண்டரியுடன் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இஷான் கிஷன் 38 ரன்களும், திலக் வர்மா 15 ரன்களும் சேர்க்க இந்திய அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


