• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இணையத்தில் விற்பனைக்கு வந்த சிறுத்தைப்பல் பதக்கம், யானைத்தந்தப் பொருட்கள் – அதிகாரிகள் அதிரடி! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இணையத்தில் விற்பனைக்கு வந்த சிறுத்தைப்பல் பதக்கம், யானைத்தந்தப் பொருட்கள் – அதிகாரிகள் அதிரடி! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
இணையத்தில் விற்பனைக்கு வந்த சிறுத்தைப்பல் பதக்கம், யானைத்தந்தப் பொருட்கள் – அதிகாரிகள் அதிரடி!

விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பாகங்களை வைத்திருப்பது, காட்சிப்படுத்துவது, கொண்டு செல்வது அல்லது வர்த்தகம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இணையத்தில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிறுத்தைப்பல் கொண்ட பதக்கம் மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்டதாகக் கருதப்படும் பல பொருட்களைப் பறிமுதல் செய்ததோடு, இது தொடர்பாக சந்தேகநபர் ஒருவரையும், இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சிறுத்தைப்பல் ஒன்று விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறித்த தகவலை இணையத்தில் கண்டறிந்ததைத் தொடர்ந்து, பனஹடுவ (Panahaduwa) அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நீண்ட விசாரணையை மேற்கொண்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாரணையைத் தொடர்ந்து, மாத்தறை பகுதியிலுள்ள கரதியாவல பகுதியில் ஒரு வீட்டை அடையாளம் கண்ட வனவிலங்கு அதிகாரிகள், நேற்று (14) அன்று அங்கு சோதனை நடத்தினர்.

இந்த நடவடிக்கையின் போது, ​​சிறுத்தைப்பல் கொண்ட பதக்கம், யானைத் தந்தத்தால் ஆன மோதிரம் மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்டதாகக் கருதப்படும் தாயத்து ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இப்பொருட்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பாகங்களாகக் கருதப்படுகின்றன என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மாத்தறை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனையடுத்து நீதவானின் உத்தரவுக்கு அமைய, சந்தேகநபர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு அன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பாகங்களை வைத்திருப்பது, காட்சிப்படுத்துவது, கொண்டு செல்வது அல்லது வர்த்தகம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று வனவிலங்குத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத வனவிலங்கு கடத்தல் தொடர்பான தகவல்களைத் திணைக்களத்தின் 1992 என்ற அவசர அழைப்பு இலக்கம் மூலம் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம், திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

Previous Post

பீப்பாயில் கண்டெடுக்கப்பட்டவை மனித எலும்புகள் என உறுதிப்படுத்தப்பட்டது | Makkal Osai

Next Post

Ind vs AFG | 2 ஆவது டி20 போட்டி இன்று தொடக்கம்.. இந்திய அணியில் முக்கிய மாற்றம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
Ind vs AFG | 2 ஆவது டி20 போட்டி இன்று தொடக்கம்.. இந்திய அணியில் முக்கிய மாற்றம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Ind vs AFG | 2 ஆவது டி20 போட்டி இன்று தொடக்கம்.. இந்திய அணியில் முக்கிய மாற்றம் | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin